Published:Updated:

சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு!

சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு!
சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு!
சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் தீர்ப்பு!

சென்னை: காஞ்சி  வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட 23 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயேந்திரர், ரகு, சுந்தரேசன் உள்பட 13 பேர் ஆஜரானார்கள். ஆனால் ஜெயேந்திரர் உள்பட 10 பேர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் வழக்கின் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கதிரவன் சமீபத்தில் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான இறப்பு சான்றிதழையும், அவர் மீதான குற்றச்சாட்டு அறி்க்கையும் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனால் கதிரவனின் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட உள்ளது.

##~~##
இதனிடையே, இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்  வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு நீதிபதி முருகன் தள்ளிவைத்தார்.
ஆண்டு கணக்கில் திகில் திருப்பங்களுடன் நடைபெற்று வந்த கொலை வழக்கு விசாரணை, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.கணேசன்