Published:Updated:

தருமபுரி கலவர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் தடை

தருமபுரி கலவர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் தடை
தருமபுரி கலவர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் தடை
தருமபுரி கலவர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் தடை

சென்னை: தருமபுரி கலவர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் தலித் சமூக மக்களின் வீடுகள் ஒரு சமூகத்தினரால் எரிக்கப்பட்டது. இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் விசாரணை நடத்தி முடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

##~~##
இந்த நிலையில்  நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக முறையான நடவடிக்கை இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தர விட வேண்டும் என்று கோரி புககேழந்தி உள்பட 5 பேர் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள்  பானுமதி, ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தருமபுரி கலவர வழக்கில் விசாரணை முடியும் வரை சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.