Published:Updated:

``எங்க காதல் தப்பில்லைனு புரிஞ்சுக்க இத்தனை வருஷமாகியிருக்கு!'' தன்பால் தீர்ப்பு குறித்து திருநங்கைகள்

``எங்க காதல் தப்பில்லைனு புரிஞ்சுக்க இத்தனை வருஷமாகியிருக்கு!'' தன்பால் தீர்ப்பு குறித்து திருநங்கைகள்
``எங்க காதல் தப்பில்லைனு புரிஞ்சுக்க இத்தனை வருஷமாகியிருக்கு!'' தன்பால் தீர்ப்பு குறித்து திருநங்கைகள்

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவுதான் இன்றைய ஹாட் நியூஸ். சமூக வலைதளங்கள் முழுவதிலும் இந்த நியூஸ்தான் வைரலாகப் பரவி வந்துகொண்டிருக்கிறது. இந்திய சட்டத்தில் செக்‌ஷன் 377-ன்படி, இயற்கைக்கு மாறாக ஒரு பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உறவு வைத்துக்கொள்வது தவறு என்றிருந்தது. இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக இன்றைய தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வரவேற்று, இது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய நாள், காதல் வெற்றியடைந்த நாள் எனப் பலரும் அவரவர் முகநூல் பக்கத்தில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்தத் தீர்ப்பு குறித்த கருத்துகளைக் கேட்பதற்காகச் சிலரைத் தொடர்புகொண்டு பேசினோம். 

கல்கி சுப்பிரமணியம், எழுத்தாளர்:

''மிகமிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இது. பால் புதுமையினர், மாற்றுப் பாலினர், பால் சிறுபான்மையினர் என எல்லோருக்கும் முக்கியமான நாள் இது. எங்களுடைய மனித உரிமைகள் குறிப்பாக, எங்கள் காதல் உறவுகள் அங்கீகரிக்கப்பட்ட நாள் இது. இந்தத் தீர்ப்பு சமூகம் ஏற்றுக்கொள்ளலுக்கு முதல் படிக்கட்டாக இருக்கும். எங்கள் மீதான வன்முறை, வெறுப்பு, ஒதுக்குதல், கேலி செய்தல் போன்றவற்றைத் தடுக்கவும், வன்முறை செய்பவர்கள் மீது வழக்கு தொடுக்கவும் இந்தத் தீர்ப்பு உதவிகரமா இருக்கும். இதையெல்லாம் தாண்டி நாங்கள் மதிப்புடனும் சுயமரியாதையுடனும் வாழவும், நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை உரக்கச் சொல்வதாகவும் இந்தத் தீர்ப்பை பார்க்கிறேன். சமூக ரீதியாக இனிவரும் தலைமுறையினர்களுக்கு, மாற்றுப்பாலினர், பால் புதுமையினர், பால் சிறுபான்மையினர் பற்றிய கல்வியைப் பள்ளியிலும் கல்லூரியிலும் போதிக்கவும் இந்தத் தீர்ப்பு துணையாக இருக்கும்.''

கிரேஸ் பானு, சமூக செயற்பாட்டாளர்

''ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இந்த 377 செக்‌ஷன், LGBT கம்யூனிட்டிக்கு மட்டும் கிடையாது. ஒரு பாலினத்தவர் உறவு வைத்துக்கொள்வது அவரவர் தனிப்பட்ட உரிமை என இந்நாள் வரை போராடிட்டிருந்தோம். எங்களுக்குச் சாதகமா தீர்ப்பு கிடைச்சது வரவேற்கத்தக்க விஷயம். இந்தப் போராட்டம் ஆரம்பித்து 187 வருடங்கள் ஆகுதுன்னு சொல்லணும். பல தலைமுறைகளின் இத்தனை வருஷ போராட்டத்துக்கு கிடைச்ச வெற்றியாக இதைப் பார்க்கிறேன். இது, திருநங்கைகளுக்கு மட்டுமான தீர்ப்பு கிடையாது. ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனோ, ஓர் ஆண் இன்னோர் ஆணுடனோ, எந்தப் பாலினத்தினருடனும் விருப்பந்தின் பேரில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். இது ஒரு ஆரோக்கியமான தீர்ப்பு. இதை இந்த சமூகத்திலுள்ள எல்லோருக்குமான தீர்ப்பாகப் பார்க்கிறேன்.''

அப்சரா, சமூக செயற்பாட்டாளர்

''பல ஆண்டுகளாக, சமூகத்தின் கட்டுப்பாடு என்ற பெயரால், இருட்டு அறையில் முகமூடி போட்டுக்கொண்டு எங்களுடைய சமுதாயம் வாழ்ந்துட்டிருந்தது. தாய், தகப்பனே புறக்கணிப்பது, நீ முழுப் பெண்ணே கிடையாது. உன்னை எப்படித் திருமணம் செஞ்சுக்க முடியும்னு விட்டுச் செல்லும் காதலன் என நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டோம். இப்போ, நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிச்சு, இந்தச் சமுதாயம் எங்களை மதிக்கும்னு நம்பறேன். நல்ல தீர்ப்பைக் கொடுத்திருக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி. குறிப்பிட்ட இரண்டு பேருக்கிடையே உண்டாகும் காதலையும் உறவையும் தவறுன்னு சொல்றதை இனியாவது மாற்றிக்கொண்டு, அவர்களும் சக மனிதர்களை நேசித்து மனிதர்களாக வாழும் சமுதாயத்தை உருவாக்கணும்.''

 'எங்களுடைய காதலைப் புரிந்து கொள்வதற்கு இத்தனை வருடங்கள் ஆகியிருக்கு..!' என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின் முதல் பதிவாக இருக்கின்றது..!

காதலால் எதையும் சாதிக்க முடியும்..!