Published:Updated:

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் ஆடிட்டரிடம் விசாரணை

பெங்களூர்:  பெங்களூருவில் நடந்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது முன்னாள் ஆடிட்டரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் முன்னாள் ஆடிட்டர் சண்முகத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா வாங்கிய நிலங்கள், வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்து விபரங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இரா.வினோத்