Published:Updated:

`தெய்வீக உணர்வுடன் பணியாற்றுங்கள்' - அர்ச்சகர்களுக்கு நீதிபதி அறிவுரை

`தெய்வீக உணர்வுடன் பணியாற்றுங்கள்' - அர்ச்சகர்களுக்கு நீதிபதி அறிவுரை
`தெய்வீக உணர்வுடன் பணியாற்றுங்கள்' - அர்ச்சகர்களுக்கு நீதிபதி அறிவுரை

`தெய்வீக உணர்வுடன் பணியாற்றுங்கள்' - அர்ச்சகர்களுக்கு நீதிபதி அறிவுரை

கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த பழைமையான சிலைகள் வெளிநாட்டுக்குக் கடத்தியது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. `அர்ச்சகர்களுக்குத் தெய்வீக உணர்வு இல்லை' என்று கருத்து தெரிவித்துள்ளது நீதிமன்றம். 

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, கோயிலில் உள்ள ராகு, கேது சிலைகள் சேதமடைந்துள்ளதால், சிலைகளை மாற்றம் செய்ய தலைமை ஸ்தபதி முத்தையா பரிந்துரை செய்திருந்தார். அதோடு, கோயிலில் சந்நிதியில் புன்னை மரம் அருகே அமைந்துள்ள புன்னை வனநாதர் சந்நிதியில் இருந்த 1,000 ஆண்டுகள் பழைமையான மயில் வடிவிலான சிலையும் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது. இதனால், சேதமடைந்த சிலைகளை மாற்றி புதிய சிலைகளை வைக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இரவோடு இரவாகச் சிலைகள் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன என்ற புகார் எழுந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா நடத்திய விசாரணையில் அது தெரியவந்தது.

அந்த விசாரணையில், புன்னை வன நாதர் சந்நிதியில் இருந்த ராகு, கேது, மயில் சிலைகள் சேதமடைந்து இருந்ததாகவும், அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்லி, இரவோடு இரவாக சிலைகளை எடுத்துச் சென்றுவிட்டனர். ஆனால், அதற்குப் பதில் இப்போதுவரை புதிய சிலைகள் அமைக்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கபாலீஸ்வரர் கோயில் புன்னை வன நாதர் சந்நிதியில் காணாமல்போன சிலைகளை மீண்டும் நிறுவி, அதற்கு கும்பாபிஷேகம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டு இருந்தது.

போலீஸாரும் விசாரணை நடத்தினர். அதோடு, சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கபாலீஸ்வரர் கோயிலில் சிலை கடத்தல் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இந்து அறநிலையத்துறை நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதோடு, கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றுவது மிகவும் அவசியம். ஆனால், அர்ச்சகர்கள் அவ்வாறு பணியாற்றாமல் இயந்திரமாகப் பணியாற்றி வருகின்றனர் என்று கருத்து தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு