Published:Updated:

ஆப்பிள் போன் பொது மேலாளருக்கு பிடிவாரன்ட் - நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

ஆப்பிள் போன் பொது மேலாளருக்கு பிடிவாரன்ட் - நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
ஆப்பிள் போன் பொது மேலாளருக்கு பிடிவாரன்ட் - நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

ஆப்பிள் போன் பொது மேலாளருக்கு பிடிவாரன்ட் - நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

நெல்லையில் செல்போன் வாங்கியவருக்கு உரிய சேவை வழங்காத விவகாரத்தில் ஐபோன் நிறுவன மேலாளருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை பாளையங்கோட்டை அன்புநகர் பகுதியில் வசிப்பவர், செந்தில்குமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே 30-ம் தேதி நெல்லையில் உள்ள சக்சஸ் மொபைல் நிறுவனத்தில் ரூ.22,500 மதிப்புள்ள ஆப்பிள் ஐபோன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த மொபைல் போன், வாங்கிய நாள் முதலாகவே முறையாகச் செயல்படவில்லை. அந்த மொபைல் போன் அதிகமாகச் சூடாக இருந்ததால் பயன்படுத்த முடியவில்லை. 

அதனால் செல்போனை வாங்கிய செந்தில்குமார் கடைக்குச் சென்று இது குறித்து முறையிட்டார். அத்துடன் செல்போனையும் கடையில் ஒப்படைத்தார். மறுநாள் அந்தக் கடைக்குச் சென்றபோது செல்போனை திரும்ப வழங்கினார்கள். ஆனால், அதுவும் அதிகமாகச் சூடாக இருந்தது. அதனால் மறுபடியும் கடைக்காரரிடம் சென்று முறையிட்டார். அவர் போனை மாற்றிக் கொடுக்க மறுத்துவிட்டார். தேவைப்பட்டால் சர்வீஸ் செய்து கொடுப்பதாகத் தெரிவித்த கடையின் மேலாளரும் உரிமையாளரும் செல்போனை வாங்கிக்கொண்டனர். 

ஐ போனை சர்வீஸ் சென்டருக்கு அனுப்பி வைத்து சரிசெய்து கொடுப்பதாகத் தெரிவித்து அதிகாரபூர்வமான சர்வீஸ் சென்டருக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சரிசெய்து கொடுக்கவில்லை. மீண்டும் அந்த சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டபோது, செல்போனில் உற்பத்தி குறைபாடு ஏற்பட்டு இருப்பதால் கம்பெனிக்கு அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர் தொடர்பு கொண்டபோது கம்பெனி நிர்வாகத்தினர் மட்டுமல்லாமல் விற்பனை செய்தவர்கள் என அனைவருமே இந்தத் தொழில்நுட்பக் கோளாறு தொடர்பாகப் பேசவே மறுத்து விட்டனர். 

அதனால், செல்போனை வாங்கிய செந்தில்குமார் வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நுகர்வோர், நீதிமன்றம் ஆப்பிள் நிறுவன பொது மேலாளர், உற்பத்தி பொறியாளர் அதிகாரி, சர்வீஸ் மேலாளர், சக்சஸ் மொபைல் கடையின் மேலாளர் மற்றும் கடையின் உரிமையாளர் ஆகிய 5 பேரும் மனுதாருக்கு அதே மாடல் புதிய மொபைல் போன் வழங்க உத்தரவிட்டனர். அத்துடன், மனுதாரரின் மன உளைச்சலுக்கு நஷ்டஈட்டு தொகை மற்றும் வழக்கு செலவுடன் ரூ. 9,000 வழங்கவும் உத்தரவிட்டனர். 

இந்த இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்காவிட்டால, 8 சதவிகித வட்டியுடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் சார்பாக முழுத் தொகையும் வழங்கப்படவில்லை. அதை வழங்கக் கோரி, மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் பிரம்மா மூலம் செயலாற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எதிர்தரப்பினர் அந்தத் தொகையை வழங்காததால் ஆப்பிள் நிறுவன பொது மேலாளர் உட்பட 5 பேருக்கும் பிடி வாரன்ட் பிறப்பித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் நாராயணசாமி உத்தரவிட்டார். 

அடுத்த கட்டுரைக்கு