Published:Updated:

`ரூ.100 கோடியை யாரிடம் வசூலிப்பது?' - ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா மனு மீது நாளை விசாரணை

`ரூ.100 கோடியை யாரிடம் வசூலிப்பது?' - ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா மனு மீது நாளை விசாரணை
`ரூ.100 கோடியை யாரிடம் வசூலிப்பது?' - ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா மனு மீது நாளை விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிப்பது தொடர்பாகக் கர்நாடக அரசு தாக்கல் செய்த கியூரேட்டிவ் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்குச் சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு நீதிமன்றம் 4 வருட சிறைத்தண்டனையுடன் அபராதத்தொகையும் விதித்தது. அதன்படி, ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், சசிகலா உள்ளிட்டோருக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி சசிகலா உள்ளிட்டோர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

ஆனால், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூல்செய்வது குறித்து கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து, 100 கோடி ரூபாயை எப்படி வசூல்செய்வது என்று விளக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு கியூரேட்டிவ் மனு தாக்கல்செய்தது. இந்த மனு குறித்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் சேம்பரில் நாளை விசாரிக்கப்படுகிறது. மனுவை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் மதன் பி லோகூர் ஆகியோர் விசாரிக்க உள்ளனர்.