Published:Updated:

``முழு திருப்தியுடன் விடைபெறுகிறேன்' - நீதிபதி தீபக் மிஸ்ரா உருக்கம்!

மலையரசு
``முழு திருப்தியுடன் விடைபெறுகிறேன்' - நீதிபதி தீபக் மிஸ்ரா உருக்கம்!
``முழு திருப்தியுடன் விடைபெறுகிறேன்' - நீதிபதி தீபக் மிஸ்ரா உருக்கம்!

``எங்களுக்கு எல்லா வழக்குகளும் ஒன்றுதான்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. சபரிமலை வழக்கின் தீர்ப்பு, ஆதார் தீர்ப்பு, தன் பாலின உறவு தீர்ப்பு என கடந்த இரண்டு வாரக் காலமாக இவரின் தீர்ப்புகள் பரபரப்பின் உச்சத்திலேயே இருந்தன. பல்வேறு முக்கிய வழக்கில் தீர்ப்பு வழங்கிய இவரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நடந்த பிரிவு உபசார விழாவில் அவர் உரையாற்றினார். அதில் மிகவும் உருக்கமாகப் பேசினார். ``இந்திய நீதித்துறை தான் உலக அளவில் மிகவும் வலிமையான அமைப்பு. நீதிக்கு மனித முகம் இருக்க வேண்டும். வரலாறு சிலசமயங்களில் அன்பாகவும் சில நேரங்களில் அக்கறையற்றதாகவும் இருக்கும். நான் மக்களுக்கு வரலாற்றை நினைத்துத் தீர்ப்பளிக்கவில்லை. 

எப்போது மக்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் கண்ணோட்டத்தை கொண்டே தீர்ப்பளித்துள்ளேன். எங்களுக்கு எல்லா வழக்குகளும் ஒன்றுதான். கண்ணீர் என்றால் கண்ணீர்தான்; தீர்ப்பு வழங்கும்போது பணக்காரன், ஏழை என நாங்கள் பார்ப்பதில்லை. ஒவ்வொரு மட்டத்திலும் பார் அசோசியேஷனுக்கு  கடமைபட்டுளேன். முழு திருப்தியுடன் விடைபெற்றுச் செல்கிறேன்" எனப் பேசினார். இதேபோல் மிஸ்ராவை வாழ்த்திப் பேசிய ரஞ்சன் கோகாய், `` தொலைநோக்கு பார்வை கொண்டவர் மிஸ்ரா. அவர் வழங்கிய தீர்ப்புகள் எதிர்காலத்திலும் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்" என்று பேசினார்.