Published:Updated:

முதியவரின் வீட்டை அபகரிக்க காவல்துறை உடந்தை - போலீஸ் தரப்பில் விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

முதியவரின் வீட்டை அபகரிக்க காவல்துறை உடந்தை - போலீஸ் தரப்பில் விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!
முதியவரின் வீட்டை அபகரிக்க காவல்துறை உடந்தை - போலீஸ் தரப்பில் விளக்கமளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

81 வயது முதியவரின் வீட்டை அபகரிக்க முயல்வதாகவும், இதற்குக் காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் உடந்தையாக செயல்படுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக ஒரு வாரத்தில் பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ரகுபதி. இவர், தனக்கு சொந்தமான 4,760 சதுர அடி நிலத்தில் வீடு கட்டி, அதை தன் இரு மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் பாகப் பிரிவினை செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், வயதான ரகுபதியை கவனிப்பதற்காக அமுதா என்பவர் பணியமர்த்தப்பட்டார். இவர், மோகன் என்பவருடன் கூட்டு சேர்ந்து, ரகுபதியை திருமணம் செய்து கொண்டதாக போலி திருமணச் சான்றிதழ் தயாரித்ததுடன், போலி ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரிக்கவும் முயன்றுள்ளார்.

இதுசம்பந்தமாக காவல் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், காவல் துறையினர், வழக்கறிஞர்களுடன் அடிக்கடி வீட்டுக்கு வந்து துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியும் ரகுபதியின் மகள் ரோகினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.