Published:Updated:

`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்!

`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்!
`பிச்சை எடுத்தாகிலும் மனைவி குழந்தைகளைக் காப்பாத்தணும்’ - கணவனுக்கு எதிராகச் சாட்டை எடுத்த உயர் நீதிமன்றம்!

கடன் வாங்கியாவது மனைவி குழந்தைகளைக் கணவன் காப்பற்ற வேண்டும் என ஹரியானா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், ``தனக்குத் தர வேண்டிய ஜீவனாம்ச பணத்தைக் கணவர் தரவில்லை. இதுவரை ரூ.91,000 நிலுவையில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நபர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு ஹரியானா நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.எஸ்.மதான் முன்னிலையில் நடந்தது. அப்போது கணவரின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, சிறைத்தண்டனையை உறுதி செய்த நீதிபதி, ``கணவரைப் பிரிந்த மனைவி மற்றும் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தருவதே ஜீவனாம்சம். 

நிதி ஆதாரம் இல்லாமல் எப்படி வாழ முடியும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் நியாயமான காரணம் இல்லாமலே ஜீவனாம்சம் வழங்காமல் இருந்திருக்கிறார். ஆகவே அவரது சிறைத்தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது. இவரைச் சிறைக்கு அனுப்புவது அவரது கடைமையை சரிவரச் செய்யாமல் இருந்ததற்காகவே" எனக் கூறினார். மேலும், ``மனைவி, குழந்தைகளைச் சிறப்பாகக் கவனிப்பதே கணவனின் முதல் கடமை. மனைவி குழந்தைகளைக் காப்பற்ற கணவன் கடன் வாங்கலாம், யாசகம் வாங்கலாம். ஏன் திருடக்கூட செய்யலாம். அதில் தவறு இல்லை" என நீதிபதி கருத்து கூறினார்.