நிழல் உலக தாதாக்கள் போல, நிழல் உலக அரசியல்வாதிகளும் உண்டு. அந்த வகையில் அதிர வைக்கிறது... ஜெ.பி என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷின் அபரிமிதமான வளர்ச்சி. இவரை, ‘அக்னி ஜெ.பி’ என்றுதான் அழைக்கிறார்கள். காரணம், அக்னி என்கிற பெயரில் சென்னையில் கட்டுமான நிறுவனம், விளம்பரம் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்திவருவதுதான். ‘‘தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எங்கள் அக்னி ஜெ.பி-யின் பவரை யாராலும் அசைக்க முடியாது” என்கிறார்கள் ஜெ.பிக்கு நெருக்கமானவர்கள். முழுக்க முழுக்க நிழல் சக்தியாகவே தன்னை இத்தனை ஆண்டு காலம் தமிழக அரசியலில் நிலைநிறுத்தி வைத்திருந்த இந்த ஜெ.பி., சமீபத்திய வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனையால் வெளிஉலகுக்குத் தெரியவந்துள்ளார்.

முட்டை மற்றும் பருப்பு சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனங்களில் கடந்த வாரம் வருமானவரித் துறையினர் தொடர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் அக்னி குழுமமும் சிக்கியது. இதன் தலைவர்தான் இந்த ஜெ.பி. இந்த அளவுக்கு இவர் கொடிகட்டிப் பறப்பதற்கு ஆரம்பக் காரணம், இவர் அ.தி.மு.க-வின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனனின் அக்கா மகன் என்பதுதான்.

அவருக்கு நெருக்கமானவர்களிடம் மேற்கொண்டு துருவியபோது, அவர்கள் சொன்ன தகவல்கள் வாயைப் பிளக்க வைத்தன. ‘‘ஜெயப்பிரகாஷ், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படித்துவிட்டு, சுயதொழில் புரியும் ஆர்வத்தில் ஜெ.பி டயர்ஸ் என்ற பெயரில் கடையைத் திறந்தார். ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற நேரம் அது. அவரின் அமைச்சரவையில் மதுசூதனன் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். ஜெயப்பிரகாஷுக்கு அடித்தது ஜாக்பாட். தாய்மாமன் மதுசூதனனின் நிழலாக வரத்துவங்கினார். அப்போது, சமூகநலத் துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரியின் நட்பும் இவருக்குக் கிடைக்க, சத்துமாவு சப்ளை உள்ளிட்ட வேலைகளைக் கையில் எடுத்தார்.

இந்த அரசியல் நெருக்கம் காரணமாக, சென்னையின் இளம் கல்வி வள்ளல் ஒருவருடனும் பழக்கம் ஏற்பட்டு, அது நட்பாகவும் மாறியிருக்கிறது. பின்னர், பல்வேறு காரணங்களால், கல்வி வள்ளலின் நட்பைத் துண்டித்தார். அக்னி கல்வி நிறுவனத்தை ஜெ.பி ஆரம்பிப்பதற்குக் காரணமே அந்த வள்ளலுடனான மோதல்தான்.

அ.தி.மு.க ஆட்சி முடிவுக்கு வந்தபோது, அமைச்சராக இருந்த மதுசூதனன்மீது ஊழல் குற்றச்சாட்டுப் பதிவாகியது. அந்தக் குற்றச்சாட்டில் ஜெயப்பிரகாஷ் பெயரும் சேர்க்கப்பட்டு, வழக்கை அவர் சந்தித்தார். ஆனாலும், அதற்குப் பிறகும் தொடர்ந்து தன் பிசினஸ்களை வளப்படுத்த அவர் தயங்கவில்லை. விளையாட்டுத் துறையிலும் இவருக்கு ஆர்வம் உண்டு. தமிழகத்தில் கிரிக்கெட்டில் புகழ்பெற்றுள்ள ஒருவரின் சகோதர ருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு, அவர் மூலமாக அகில இந்திய அளவில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று பலரின் நட்பையும் எளிதாகப் பெற்றார். கூடவே தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நட்பும் கிடைத்தது. சேகர் ரெட்டி, தமிழகத்தில் காலூன்றியபோதே அவருக்கு நெருக்கமான நபராக மாறினார் ஜெ.பி. இருவருமே தெலுங்கு பேசும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நட்பு மேலும் பலமானது. இதன்மூலமாகத்தான், முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவருடன் நெருக்கமாகியுள்ளார் ஜெ.பி. இதுமட்டுமல்ல, தி.மு.க ஆட்சியின்போது உள்துறைச் செயலாளராக இருந்த சையது முனீர் ஹோடாவும் இவருக்கு மிகவும் நெருக்கம்தான். அதனால்தான் பணி ஓய்வுக்குப் பிறகு, ஜெ.பி-யின் அக்னி கல்லூரியில் ஆலோசகர் பொறுப்பில் இன்றுவரை அமர்ந்துள்ளார் முனீர் ஹோடா.

அதிகாரிகள் சிலரின் பணத்தைக் கையாளும் பொறுப்பு, முக்கிய அமைச்சர்களின் கஜானாவைக் கவனிக்கும் பொறுப்பு என்று பலவும் இவருக்குக் கைகூடியிருக்கிறது. தமிழகத்தில் முக்கிய டெண்டர் விவகாரங்களில் ஜெ.பி-யின் செல்வாக்கைக் கண்டு அதிகாரிகளே அச்சம் அடைந்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. வெளிநாடுகளில் நிலக்கரி டெண்டர் எடுத்துக்கொடுப்பது, வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தமிழகத்தில் தொழில் துவங்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்கித்தருவது போன்ற நடவடிக்கைகளிலும் ஜெ.பி ஈடுபட்டுவந்தார். இவரின் ஆரம்பம் அ.தி.மு.க என்றாலும், தி.மு.க-விலும் செல்வாக்கை வளர்த்திருக்கிறார். தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் இப்போதும் ஜெ.பி-யுடன் நல்ல தொடர்பில் உள்ளார்கள். குறிப்பாக, தலைமையின் நெருக்கமான உறவினர் ஒருவரே இவருக்கு நண்பர் என்று சொல்லி சபாஷ் போட வைக்கிறார்கள்.

இவர் சிக்கியது எப்படி?

முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமாக சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்த 11 ஏக்கர் இடத்தை ஜெயப்பிரகாஷ் வாங்கியிருக்கிறார். இது சம்பந்தமான ஆவணங்களும் பணப்பரிமாற்ற தகவல்களும், அந்த முன்னாள் அமைச்சர் வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு ரெய்டு நடந்தபோது சிக்கியுள்ளன. அப்போதிருந்தே ஜெயப்பிரகாஷை வருமானவரித் துறையினர் கண்காணிக்க ஆரம்பித்துவிட்டனர். கிறிஸ்டி நிறுவனத்தின் டீலிங்குகளிலும் ஜெயப்பிரகாஷின் செல்வாக்கு படிந்திருப்பதை உறுதிசெய்த வருமானவரித் துறையினர், கிறிஸ்டியுடன் சேர்த்து அக்னி குழுமத்துக்கும் குறிவைத்தனர்.

ஜெ.பி என்ற மனிதர், தமிழக அரசியலில் நிழல் ராஜ்ஜியமே நடத்திவந்துள்ளதை நினைத்தாலே மலைப்பாக உள்ளது.

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்