Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

‘`பக்-கை சரிசெய்துவிட்டோம், வருண்! நீங்கள் பரிந்துரை செய்தவர் மிகவும் அற்புதமாக வேலை

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

செய்திருக்கிறார்’’ புரோகிராமிங் பிரிவின் தலைவர் அன்று காலை வருணிடம் சொன்னார். 

‘`அவர் வேலைக்குச் சேர்ந்து மூன்று நாள்தானே ஆகிறது.’’

‘`ஆமாம், அவர் புரோக்ராம் முழுவதையும் மறுபடியும் சரிபார்த்து, தவறைச் சரிசெய்ய ஒரு எளிய மாற்றம் தேவையாயிருந்ததைக் கண்டறிந்து அதை சரிசெய்தார். அதை அறிமுகப்படுத்த இப்போது நாம் தயாராக இருக்கிறோம். அதனுடைய அப்டேட்டை இன்றைக்கு ரிலீஸ் செய்துவிட்டால் டவுன்ஸ்விலே மீண்டும் சரியான நிலைக்கு வந்துவிடும்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

‘`மகிழ்ச்சி’’ என வருண் பேசிக் கொண்டி ருந்தாலும், அவனுடைய மனம் தான்யாவை நினைத்துக்கொண்டிருந்தது. அந்த சோகமான நிகழ்வுக்குப்பிறகு அவளுடைய வீட்டை விட்டு அவர் வெளியே வரவில்லை. இதுகுறித்து வருண் அதிகம் கவலைப்பட்டான். தினசரி அலுவலகத்திலிருந்து நேராக தான்யா வீட்டுக்குச் சென்று அவளுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு, தன்னுடைய வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவன் ஆதித்யாவுடன் சரியாகப் பேசவில்லை.

நிதி மந்திரிக்கும், இறந்துபோன சி.இ.ஓ-வுக்கும் இடையேயான உறவு குறித்த செய்தியை ஒளி பரப்புவதா, வேண்டாமா என்று `டைம்ஸ் நெள’-வைச் சேர்ந்த வர்கள் கலந்தாலோசித்ததில் செய்தியை ஒளிபரப்புவதென்று  முடிவெடுத்தனர்.

நிதி மந்திரிக்கும், மாள்விகாவுக் கும் இடையே உறவு இருந்திருப்ப தற்கான சாத்தியம் இருக்கக்கூடும் என்கிற செய்தி எதிர்க்கட்சிகளுக்கு நல்ல தீனியாக அமைந்தது. அன்றைக்கு நாடாளுமன்றத்தில் இந்தச் செய்தி ஒரு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மந்திரி ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

நிதி மந்திரி ஒவ்வொரு சவாலையும் மிகவும் தீர்மானமாக எதிர்கொண்டார்.

‘`நான் எந்தத் தவறும் செய்ய வில்லை. நீங்கள் என்னைப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமா?  நீக்குங்கள். ஆனால், நானாக ராஜினாமா செய்யமாட்டேன். அப்படி ராஜினாமா செய்தால், அந்த விஷயத்தை நான் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகிவிடும்’’  என்றார்.

பிரதம மந்திரிக்கும் வேறு வழி இல்லை, கூட்டணி ஆட்சியிலிருக் கும் ஆபத்துகளில் இதுவும் ஒன்று. 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மந்திரிக்கு ஆதரவாக இருந்தனர். கட்டாய நீக்கம் செய்தால், அது மத்திய அரசே கவிழ்ந்துவிடக்கூடும்.

ஆதித்யாவின் துயரங்கள் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அவர் அமெரிக்காவில் உள்ள வாடிக்கை யாளருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலான கான்ஃபரன்ஸ் காலை முடித்தபோது சந்தீப் உள்ளே நுழைந்து, சில காகிதங்களை ஆதித்யாவிடம் கொடுத்தார் – அது என்.ஒய்.ஐ.பி அனுப்பியிருந்த வக்கீல் நோட்டீஸ்.

‘`மாட் இதை நமக்கு அனுப்பி யிருக்கிறார். ஏ.டி.எம் கொள்ளை யால் அவர்கள் இழந்த ஐந்து மில்லியன் டாலரை நாம் அவர் களுக்குக் கொடுக்க வேண்டு மென்று கேட்கிறார். அவர்கள் கேட்ட  பணத்தைத் தரவில்லை என்றால் ஒப்பந்தம் முறிந்துவிடுமாம்.’’

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அந்த ஆவணத்தைப் படித்தபிறகு ஆதித்யா, ‘‘நாம் பணத்தைத் திரும்பக் கொடுத்தாலும்கூட அவர்கள் நம் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளவே செய்வார்கள் என்பதை இதை வாசித்தாலே தெரிகிறது’’ என்று கூறிய அவர் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, ‘‘நாம் இதற்குப் பதில் அளிக்க வேண்டும்’’ என்றார்.

அந்த சமயத்தில் உள்ளே நுழைந்தார் ஸ்வாமி. ‘`இந்த மாதிரி செய்ய வேண்டாம் என்று ‘மாட்’டிடம் கெஞ்சினேன். அவர் என் பேச்சைக் கேட்க வில்லை. என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்’’ என்றார்.

‘`இட்ஸ் ஓகே, சுவாமி. கவலைப்பட வேண்டாம். எல்லாம் நன்றாகவே முடியும்’’ என்று சந்தீப் கூறினார்.

வாஷிங்டன் DC

ஏட்ரியன் இந்த நாளுக்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருந்தார். அவர் க்ளோரியா டானை நேர்காணல் செய்ய அன்று செல்லவிருந்தார். அவளுடைய வீட்டிலிருந்து சில மைல்கள் தொலைவிலிருக்கும் காபி ஷாப்பில் எவ்விதச் சங்கடமும் இல்லாமல் ஏட்ரியனைச் சந்தித்தாள்.

‘`இப்படி நடப்பதற்கு என்ன காரணம் என்று உனக்கு ஏதாவது தெரிகிறதா?’’ என்று கேட்டபடி ஏட்ரியன் பேச்சை ஆரம்பித்தார். க்ளோரியா தலையை அசைத்தாள்.

‘`ஏதாவது தனிப்பட்ட விரோதம்... குடும்ப சம்பந்தம்.. சொத்து விவகாரம்... பணம்... உறவு...?”

‘`எனக்குத் தெரிந்தவரையில் இவை எதுவுமில்லை.’’

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

‘`உங்களுடைய பெற்றோரிடையே உறவு சுமூகமாகத்தானே இருந்தது?”

‘`ஆரம்பகாலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால், சமீப காலமாக அவர்களுக்குள் சின்னச் சின்னச் சண்டைகள் இருந்து வந்தன.’’

‘`ஏன்?”

‘`என்னால்தான். அப்பா என்னைப் பற்றிக் கவலைப்பட்டார். நான் அவரை சங்கடப்பட செய்து அவருடைய செனட்டர் பதவிக்குப் பங்கம் விளைவித்துவிடுவேனோ எனக் கவலைப்பட்டார். நான் மற்றெந்த டீன்ஏஜரையும் போன்றவள்தானே?

நான் நண்பர்களுடன் வெளியே போவேன். பார்ட்டி, சோஷியலைசிங், நண்பர்களை அழைப்பது என மற்ற டீன் ஏஜ் பெண்களைப்போல நடந்துகொண்டேன். சில வேளைகளில், வகுப்பிற்குப்பிறகு மென்மையான `ட்ரக்’குகளை எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால், அவர் கவலைப்படக்கூடிய அளவுக் கெல்லாம் நான் சென்றதில்லை. இந்தக் காலத்தில் யார்தான் ட்ரக் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள்? வழக்கமாக, வெள்ளிக்கிழமை இரவு நடக்கும் எங்களுடைய பார்ட்டிகளில் ஒரு முறை காவல்துறையினர் ரெய்டு நடத்தினார்கள்.

சட்டவிரோதமாக எதையும் அவர்கள் அங்கு கண்டுபிடிக்க வில்லை என்பதால், சில மணிநேரங்கள் கழித்து எங்களை வீட்டுக்குப் போக அனுமதித்தார்கள். அந்த ரெய்டு குறித்து அம்மாவிடமும் கூறினேன்’’ என்றாள்.

‘`அப்பாவிடம்...?’’

‘`அவரிடம்  சொன்னதில்லை. அம்மா எப்போதும் என் பக்கம்தான். நான் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறேன் என அவருக்குத் தெரியும். இப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்றால், அதை வீட்டுக்குள்ளேயே செய்து பார் என அவர் சொல்வார். அவர்தான் எனக்கு `காட்டன் ட்ரெயிலை’ அறிமுகப்படுத்தி வைத்தார்.’’

ஏட்ரியன் இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தார். ‘‘போதைப் பொருள் கடத்தல் தொடர்பான, மறைமுகமான இணையதளத்தை அவர்தான் அறிமுகப்படுத்தி வைத்தாரா?”

‘`ஆமாம். ஏட்ரியன், இந்த உரையாடலை நீங்கள் பதிவு செய்யவில்லை என நம்புகிறேன். நான் இந்த உண்மையை உங்களிடம் சொல்லக் காரணம், இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான்.  நான் சொன்னது வெளியில் வந்து, அதனால் என் அம்மாவுக்குப் பாதிப்பு நேர்ந்தால், நான் இதை மறுத்துவிடுவேன்.’’

‘`நான் அப்படிச் செய்ய மாட்டேன். என்னை நம்பு’’ என்றார் ஏட்ரியன்.

‘`அப்பாவினுடைய நடத்தை எங்களுக்கு மனச் சோர்வைத் தந்தது. எனக்காகவும், சில சமயங்களில் அம்மாவுக்காகவும் மன அழுத்த எதிர்ப்பு மருந்தை காட்டன் ட்ரெயில் மூலம் அம்மா வாங்குவதுண்டு. அவை மருந்துக் கடைகளில் கிடைப்பதில்லை. அவர் இந்த மருந்து வாங்குவதை யாராவது ட்ராக் செய்து, அதை அப்பாவுக்கு எதிராக உபயோகப்படுத்துவதை விரும்பவில்லை.”

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28

‘`காட்டன் ட்ரெயிலில் யார் ஆர்டர் செய்வார்கள்?”

‘‘பெரும்பாலும் அம்மாதான். அவர் பயணம் செய்யும்போது மருந்தை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்வார். அது தீர்ந்துவிட்டால், நானும் காட்டன் ட்ரெயிலில் ஆர்டர் செய்வேன்.’

‘`காட்டன் ட்ரெயில் பிட்காயினை மட்டும் தானே ஏற்றுக்கொள்ளும், இல்லையா?”

‘`ஆமாம். எனக்கென்று என் சொந்த பிட்காயின் வாலட் இருக்கிறது. அம்மா அதை மிகவும் கவனமாகக் கண்காணிப்பதுடன் அவரும் எனக்கு பிட்காயினை  ட்ரான்ஸ்ஃபர்  செய்வார்.’’

‘`பிட்காயினை வைத்து என்ன வாங்குவாய்?’’

‘`பெரும்பாலும் மரிஜூவானா. எப்போ தெல்லாம் வீட்டில் பார்ட்டி நடக்கிறதோ அப்போ தெல்லாம். ஒரு நாள் இதை அப்பா கண்டுபிடித்து விட்டார். அன்றைக்கு அம்மாவும், அப்பாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. என்னுடைய அனுமதியின் பேரில்தான் அவள் இதை உபயோகிக்கிறாள் என்றும், நான் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அம்மா, அப்பாவிடம் கூறினார். அன்றைக்கு அம்மாவால் நான் காப்பாற்றப்பட்டேன். நான் தத்து எடுக்கப்பட்ட குழந்தையென்றாலும் அம்மா என் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

நிதிச் சீர்திருத்தக் கமிட்டிக்கு அப்பாதான் தலைவர். சொல்லப்போனால், அவர் கொஞ்சம் தாராளவாதி. பிட்காயினை சட்டப்பூர்வமானது என அறிவிக்க வேண்டும் என கமிட்டியில் கூறிய சிலரில் அப்பாவும் ஒருவர். ஆனால், அதை உபயோகித்து நான் `போதைப் பொருள்’ வாங்குவது அவரைச் சிந்திக்க வைத்தது. அவருடைய அதிகாரத்தை உபயோகித்து காட்டன் ட்ரெயிலை மூட வைக்கப் போவதாகவும், பிட்காயினை தடை செய்து அதை சட்டப் பூர்வமற்றது என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அச்சுறுத்தியிருக்கிறார்.

பிட்காயினுக்கு பிரமாதமாக நம்பகத்தன்மை இல்லாவிட்டாலும், அது அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்படாத நிலையில் இருந்தது. கமிட்டியில் உள்ள மற்றவர்களும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவர் அப்படி செய்ய மாட்டார் என அம்மாவும் நானும் நினைத்தோம். எங்களுக்கு அதைப் பற்றி அப்படியொன்றும் கவலையில்லை.’’

‘`நீ தத்தெடுக்கப்பட்ட குழந்தையா?’’

‘‘ஆமாம். லண்டனில் உள்ள அநாதை இல்லத்திலிருந்து...’’

‘`உன் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட தகவல் எதுவும் உன்னிடம் இருக்கிறதா?”

‘`இல்லை. அவர்கள் ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்து விட்டார்கள். ஆம்ஸ்டர் டாமில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டது. அவர் களுடைய அபார்ட்மென்ட் வளாகத்தில் இந்த விபத்து நடந்தது. அதில் தரை தளத்தில் இருந்த 39 பேர் இறந்தனர். அதில் எனது பெற்றோர்களும் அடங்குவர்.

‘`நீ தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று அப்பா (ஜில்லியன்) சொன்னபோது உன்னுடைய உண்மையான பெற்றோர் பற்றி ஏதாவது கூறினாரா?”

‘`நான் அதைப்பற்றிக் கேட்பதில் அக்கறை காட்டவில்லை. ஆனால் அவர் சொன்னார். என்னுடைய பெற்றோர் ஆங்கிலேயர்கள் (பிரிட்டிஷ்).’’

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்