Published:Updated:

“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

Published:Updated:
“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

‘இஸ்ரோ’ நம்பி நாராயணன்

‘‘நான் நிரபராதி என 1998 ஏப்ரல் 29-ம் தேதியே தீர்ப்பு சொல்லிவிட்டார்கள். அதற்குப் பிறகும், 20 ஆண்டுகள் நீதிக்காகப் போராடியிருக்கிறேன். நான் உட்பட ஆறு பேருடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டுத் தூக்கியெறியப்பட்டிருக்கிறது, இந்த அநியாயத்துக்கு யார் பொறுப்பு? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். போலீஸாரைத் தூண்டும் அதிகாரிகள் தப்பிவிடுவது வழக்கம். ‘இனி அந்த நிலை மாறும். அதிகாரிகளுக்கும் தண்டனை கிடைக்கும்’ என இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சதி எப்படி நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், ‘ஏன் நடந்தது’ என்று யாருக்குமே தெரியாது. அதை இந்த கமிட்டி கண்டுபிடிக்கும். எல்லோரையும் போலவே அதை அறிய நானும் ஆவலாக இருக்கிறேன்’’ என்று சொல்லும் நம்பி நாராயணனின் கண்களில் தெரிகிறது நிம்மதி.

இந்தியாவின் கிரயோஜெனிக் ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதானவர் நம்பி நாராயணன். இதுகுறித்த வரைபடங்களை வைத்திருந்ததாக மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா மற்றும் அவரின் தோழி ஃபாசூயா ஹசன் ஆகியோர் 1994-ம் ஆண்டு கேரள போலீஸால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்‌ரோ அமைப்பின் கிரயோஜெனிக் சிஸ்டம் திட்ட இயக்குநராக இருந்த நம்பி நாராயணன், இஸ்‌ரோ இணை இயக்குநர் சசிகுமாரன், ரஷ்யா விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தொழிலதிபர் எஸ்.கே.சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ விசாரணைக்குப் பிறகு அனைவரும் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு, அன்றைய கேரள முதல்வர் கருணாகரனின் பதவியைப் பறிக்கும் அளவுக்குப் பூகம்பத்தை ஏற்படுத்தியது. ‘இந்த வழக்கின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என நம்பி நாராயணன் தனி ஒருவராகச் சட்டப் போராட்டம் நடத்தினார். அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கிற்கு மூலகாரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கத் தனி கமிட்டி அமைத்துள்ளது. கைது செய்யப்பட்டபோது தனக்கு நடந்த சித்ரவதைகள், குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானங்கள், வலிகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நம்பி நாராயணனிடம் பேசினோம்.

“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இந்த வழக்கில் உங்களுடன் கைதானவர்கள் என்ன ஆனார்கள்?’’

‘‘அந்த இரண்டு பெண்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. தீர்ப்புக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக கோமாவுக்குப் போன சந்திரசேகர், இந்தத் தீர்ப்பின் விவரம் தெரியாமலே இப்போது இறந்துபோயிருக்கிறார். ஒரு காலத்தில் நான்கு கார் வைத்திருந்தவர், எல்லாவற்றையும் இழந்து நிராதரவாக நின்றார். எஸ்.கே.சர்மா கைதானதும், அவரின் அப்பா அதிர்ச்சியில் இறந்துவிட்டார். சர்மா ஸ்டீராய்டு சிகிச்சையில் இருக்கிறார். சசிகுமார் வெளியிலே தலைகாட்டாமல் இருக்கிறார். ஒரு தவறும் செய்யாமல், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.’’

‘‘வழக்கில் சிக்கி வேதனைப்பட்டபோது, யார் மீதாவது கோபம் வந்ததா?’’

‘‘இன்னும் என்னை நல்லவனாக்குவதற்காக இந்தச் சோதனைகள் வந்ததாக நினைத்துக்கொண்டேன். ஆனால், நாட்டின் வளர்ச்சி தடைப் பட்டுவிட்டதே என்று கோபமும் வருத்தமும் வந்தது. அந்தச் சம்பவங்கள் நடக்காமல் இருந்திருந்தால், விண்வெளித் துறையில் இந்தியா இன்னும் 15 வருடங்களுக்கு முன்னே இருந்திருக்கும். 2016-ல் வந்த கிரயோஜெனிக் டெக்னாலஜி 2002-ல் நடந்திருக்கும். நம் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் இயங்கும் பெரும்பாலானவை நான் தயாரித்த இன்ஜின்கள் என்பதில் திருப்தியும் பெருமையும் இருக்கிறது. கடவுள் எனக்கு இனி எத்தனை ஆண்டுகள் கொடுக்கிறார் எனத் தெரியாது. இதுவரை என் மனைவிக்கு நல்ல கணவனாகவோ, பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாகவோ இருந்ததில்லை. இனி, அதற்காக முயற்சி செய்வேன்.’’

‘‘அமெரிக்காவின் சி.ஐ.ஏ இந்த வழக்கின் பின்னணியில் இருப்பதாக உங்கள் புத்தகத்தில் கூறியிருக்கிறீர்களே?’’

‘‘நிர்க்கதியாய் நிற்பவர்கள் எதனால் அந்த நிலைக்கு வந்தார்கள் என அனுமானங்கள் கூறுவார்கள். அதுபோல எனக்கு ஏற்பட்ட நிலைக்கான காரணங்கள் இதுவாக இருக்கலாம் என அந்தப் புத்தகத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன். அது சரியா, இல்லையா என்பதை இந்த கமிட்டிதான் கண்டுபிடிக்க வேண்டும்.’’

‘‘உங்கள் வாழ்க்கை திரைப்படம் ஆகிறதாமே?’’

‘‘என் கதையைத் திரைப்படமாக்க நிறையப் பேர் விரும்பினார்கள். கதையை வேறுமாதிரியாக மாற்றிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இப்போது மாதவன் நடிப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சினிமா எடுக்கிறார்கள்.’’

- ஆர்.சிந்து
படங்கள்: ரா.ராம்குமார்

“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்!”

‘‘நரசிம்ம ராவே காரணம்!’’

ந்த வழக்கு காரணமாக ஆட்சியை இழந்த முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகனும் வட்டியூர்காவு எம்.எல்.ஏ-வுமான முரளிதரனிடம் பேசினோம். ‘‘என் தந்தைக்கு நீதி கிடைக்கவில்லை. இந்தப் பொய் வழக்கைப் பயன்படுத்தி, எங்கள் தந்தையை முதல்வர் பதவியிலிருந்து கீழே இறக்குவதற்கு அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் முழு முயற்சி எடுத்தார். அதற்காக அவர் பல தந்திரங்களைக் கையாண்டார். இத்தனைக்கும், நரசிம்ம ராவைப் பிரதமராக்கியதில் கருணாகரன் முக்கியப் பங்கு வகித்தார். எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் சக்திமிக்க தலைவராகக் கருணாகரன் விளங்கியதால், அவர் பிரதமர் பதவிக்கு வந்துவிடுவார் என்ற அச்சம் நரசிம்ம ராவுக்கு ஏற்பட்டது. அதனால்தான், பொய் வழக்கைக் காரணம் காட்டி முதல்வர் பதவியிலிருந்து இறக்கினார். கருணாகரன் இழந்த முதல் அமைச்சர் பதவி திரும்பவும் கிடைக்காது என்பதால்தான், நாங்கள் கோர்ட்டுக்குப் போகவில்லை” என்றார்.

இந்த வழக்கைக் காரணம் காட்டிக் கருணாகரனைக் காவு வாங்கியது, கேரள காங்கிரஸில் நிலவும் கோஷ்டி பூசல்தான். அதைப்பற்றி முரளிதரன் எதுவும் பேசாதது, அரசியல் நோக்கர்களுக்கு ஆச்சர்யம் தந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism