Published:Updated:

தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!

தெர்ல மிஸ்!

Published:Updated:
தெர்ல மிஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தெர்ல மிஸ்!
தெர்ல மிஸ்!

“பெரும்பாலான நீதிமன்றங்கள் ஏன் இஸ்லாமியக் கட்டடக்கலையாகவே இருக்கின்றன, இதற்கு சிறப்பான காரணங்கள் உள்ளனவா?”

- சு.தர்ஷினி, காளிப்பட்டி

தெர்ல மிஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இந்தக் கட்டட பாணிக்கு இந்தோ-சாரசனிக் பாணி என்று பெயர். 1857ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியர்களின் முதல் சுதந்திரப் போராட்டம் ஆங்கிலேயரைச் சிந்திக்க வைத்தது. இந்தியாவின் பெரும்பகுதியை இறுதியாக ஆண்ட முகலாய மன்னர்களின் மீது மக்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் புரியவர, தாங்கள் முகலாயர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று காட்டிக்கொள்வது தங்களைப் பாதுகாக்கும் என்று உணர்ந்தார்கள். தங்கள் ஆட்சிக்குரிய அரசுக் கட்டடங்களை முகலாயர்களின் கட்டடக் கலை போன்றே கட்டுவதால், மக்களிடம் இணக்கமான உறவைப் பராமரிக்கலாம் என்றும் எண்ணினார்கள்.  பெரிய குவிமாடங்கள், தொங்கும் கூரை, அழகிய ஆர்ச்சுகள், தூபிகள், ஆர்ச்சுகளுடன் கூடிய சாளரங்கள், வண்ணமயமான பெல்ஜிய நாட்டுக் கண்ணாடிகள், வரிசையாகத் தூண்கள் கொண்ட தாழ்வாரங்கள் போன்றவை இந்த பாணிக்கேயுரிய தனித்துவமான அம்சங்கள். ஆங்கிலேய விக்டோரிய பாணி மற்றும் இந்திய முகலாய பாணி இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டது இந்தோ-சாரசனிக் பாணி. சிவப்பு நிற மணற்கல் கொண்டே பெரும்பாலும் இவை கட்டப்பட்டன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் ஹவுஸ், சேப்பாக்கம் அரண்மனை, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், உயர்நீதிமன்றக் கட்டடங்கள், சென்னை அருங்காட்சியகம் போன்றவை இந்த பாணியில் கட்டப்பட்டவை. ஆங்கிலேயக் கட்டடக்கலை வல்லுநரான ராபர்ட் சிஷோம், ஹென்றி இர்வின், ப்ராசிங்டன் போன்றோர் இந்தக் கட்டடக்கலையை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்கள்.”

- நிவேதா லூயிஸ், வரலாற்று ஆர்வலர்

நான் உணவகத்துக்குச் சென்று ஒரு பிரியாணி சாப்பிட்டேன். 110 ரூபாய் + ஜி.எஸ்.டி 10 ரூபாய் என்று பில் கொடுத்தார்கள். நான் செலுத்திய 10 ரூபாய் ஜி.எஸ்.டி. அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டுவிட்டது என்பதை நான் எப்படி உறுதிசெய்வது?”

- சக்திதாஸ், குட்டியன்குப்பம்

தெர்ல மிஸ்!

“பில்லில் ஜி.எஸ்.டி. ரிஜிஸ்ட்ரேஷன் எண் இருந்தால்தான் சட்டப்படி ஜி.எஸ்.டி. வசூலிக்க முடியும். அந்த ஜி.எஸ்.டி. எண்ணை வைத்து, ஆன்லைன் மூலமாக அவர்கள் வரித்தாக்கல் செய்துள்ளார்களா என்பதை செக் செய்யலாம். ஆனால், வசூலித்த அனைத்தையுமே ஜி.எஸ்.டி. கணக்கில் தாக்கல் செய்திருக்கிறார்களா என்பதை அதிகாரிகள்தான் சோதனை செய்து கண்டறிய முடியும்.”

- ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர்

“தமிழ் வார்த்தைகளுக்கு இடையே வடமொழி எழுத்துகள் (உதாரணம்: தாஜ்மஹால்) எப்போதிலிருந்து/எவ்வாறு புகுந்தன என்பது பற்றி விளக்கமுடியுமா?”

- எம்.செல்லையா, சாத்தூர்

தெர்ல மிஸ்!

“தமிழ் வார்த்தைகளுக்கு இடையே வடமொழி எழுத்துகள் தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்,  வடமொழி எழுத்துகள் தமிழில் புகுந்தவை என்று சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், பிராகிருதம் உட்பட பலமொழிகள் தெரிந்தவர்கள் பலர் அன்றைய காலத்தில் பரவலாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் தமிழில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பலவற்றில் இந்த வடமொழிச் சொற்கள் இருப்பதைப் பார்க்க முடியும்.  ஆனால், இலக்கியத்தின் வழியாக வட சொற்கள் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. மதம் சார்ந்தும் தத்துவங்கள் சார்ந்தும் பேசும்போதுதான் இந்த வடமொழி எழுத்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடைமுறையில் இந்தச் சொற்களின் பயன்பாடு மிகக் குறைவே.”

- பொ.வேல்சாமி, எழுத்தாளர்

மாஸ்டர் ஹெல்த் செக் அப் எல்லோருக்குமே அவசியமா, அதை எந்த வயதில் இருந்து எடுக்கலாம், அது பயனுள்ள ஒன்றுதானா, அதன் மூலம் நோய்களை முன்பே அறிந்துகொள்ள முடியுமா?

- எம்.அகிலன், திருநெல்வேலி

தெர்ல மிஸ்!

“எந்த நோய் பாதிப்பையும் முன்னரே கண்டறிவதன் மூலம் உடல் நலனைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் முழு உடல் பரிசோதனை அதற்குப் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், எல்லோரும் முழு உடல் பரிசோதனை செய்துகொண்டுதான் ஆகவேண்டும் என்றில்லை.  பொதுவாக, 40 வயதுக்குமேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்கள் குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் மற்றவர்கள், 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனானவர்கள், போதிய உடலுழைப்பு  இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுபவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.”

- அருணாசலம், பொதுநல மருத்துவர்

படம்: கே.ராஜசேகரன்

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism