Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30

ஓவியங்கள்: ராஜன்

மும்பை

`டைம்ஸ் நவ்’ செய்திக்குப்பிறகு தான்யா பயங்கரமான கோபத்தில் இருந்தாள். அவளுடைய

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30

குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் சொல்ல ஆரம்பித்தாள். அவளுடைய அம்மாவின் மரணத்தில் நிதி மந்திரியின் பங்கும் இருக்கிறது என மீடியாக்களுக்கு அவள் தந்த பேட்டிகளில் குற்றம் சாட்டினாள். அவளுடைய அம்மாவை அவர் தனது காரியங்களுக்காக உபயோகித்துக் கொண்டார் என அவளுக்கு எப்போதுமே ஓர் உணர்வு இருந்துவந்தது. அதைத்தான் அவள் தனது பேட்டிகளிலும் சொன்னாள்.

இந்த விஷயங்களினால் மனவருத்தத்துக்கு ஆளாகியிருந்த  நிதி மந்திரி, சில நாள்களுக்குப்பிறகு  மும்பைக்கு வந்து விமான நிலையத்திலிருந்து நேராக ஹோட்டலுக்குச் சென்றார். இது தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதால், ஊடகங்களின் கண்களில் படாமல் தப்பித்துக்கொண்டார்.

நள்ளிரவுக்குப்பிறகு அவர், இரண்டு கார்கள் பின்தொடர ஹோட்டலிலிருந்து மலபார் ஹில்லை நோக்கிச் சென்றார். பல அடுக்குமாடிகள் கொண்ட அபார்ட்மென்ட்டின்முன் கார்கள் நின்றன. அதிலிருந்து மந்திரி இறங்கி உள்ளே சென்றார்.

தான்யா அவரை அந்த நேரத்தில் அங்கே எதிர்பார்க்கவில்லை என்றாலும்கூட அவள் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப் படுத்தவில்லை. அவள் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

‘`நான் உள்ளே வரலாமா?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30

தான்யா வாயைத் திறப்பதற்குள், அவர் உள்ளே நுழைந்தார். அப்போது, வரவேற்பரையில் உட்கார்ந்திருந்தான் வருண். அவனைப் பார்த்தவுடன் நிதி மந்திரிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாள்விகா இறந்தபோது தான்யாவுக்குப் பக்கத்தில் இருந்தவன் இவன் தான் என்பது அவர் நினைவுக்கு வந்தது.

‘`சார், நீங்கள் இங்கே வரவேண்டிய காரணம்..?” தான்யா கேட்டாள்.

அங்கிருந்து வருண் எழுந்து செல்ல எழுந்த போது, அவனுடைய தோளில் தள்ளி அவனை அங்கே அவள் உட்காரச் சொன்னாள். ‘`நீ இங்கே இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்’’ என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னாள்.

‘`தான்யா, நான் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்’’ என்றார் நிதி மந்திரி.

‘`நானும் அதைக் கேட்க ஆவலாகத்தான் இருக் கிறேன்’’ எனக் கிண்டலாக அவள் சொன்னாள். மந்திரியிடம் இந்தமாதிரி யாரும் அதுவரை பேசிய தில்லை.

‘`என்னைப் பற்றியும், உன்னுடைய அம்மாவைப் பற்றியும் பத்திரிகைகளில் நீ அதிகமாகப் படித்திருக்கலாம். படிப்பதோடு மட்டுமல்லாமல் நீயும் அதைப்பற்றி பேசி வருகிறாய். அவருடைய மரணத்துக்கும் நான்தான் பொறுப்பு என்கிற ரீதியிலும் பேசியிருக்கிறாய்.’’

‘‘சட்டம் அதன் கடமையைச் செய்யும் என நான் நம்புகிறேன். எனது அம்மா கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கு யாராவது தண்டிக்கப்பட வேண்டும்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30

‘`அந்த `யாரோ’ நான் இல்லை தான்யா. உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால், உன்னுடைய அம்மாவை நான் கொலை செய்ய வில்லை என்பதை மட்டும் நான் உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்.’’

அவர் அதைச் சொல்லும்போது தொண்டை அடைத்துக் கொண்டது. மிகவும் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் நாடாளுமன்றத்தில் பேசும் இவர், இப்போது தான்யாவுக்கு முன்பு பேசத் தடுமாறினார்.

‘`உன்னுடைய அம்மாவும், நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்வதைவிட அதற்கு ஒருபடி மேல். நீண்ட கால நட்பு. உன்னுடைய அம்மாவைப் பற்றிய அனைத்தும் எனக்குத் தெரியும், அவர் என்னுடைய `சீக்ரெட் வால்ட்’. நான் இதை ஒருபோதும் இந்த அறைக்கு வெளியே சொல்ல மாட்டேன். ஆனால், நான் அவரை மிகவும் விரும்பி னேன். அவரும் அப்படித் தான். இதை நீ நம்பத்தான் வேண்டும். இந்தச் சம்பவம் நடைபெறாமல் இருந்திருந் தால் இன்னும் சில மாதங் களில் நாங்கள் திருமணம் செய்து கொண்டிருப்போம்’’  என்றார்.

மந்திரி மனைவியை இழந்தவர் என்பது தான்யாவுக்குத் தெரியும். சில வருடங்களுக்குமுன்,  இவருடைய மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போயிருந்தார். அவருடைய உணர்ச்சி மயமான எதிர்வினையைக் கேட்ட தான்யாவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

‘‘நான்தான் உன்னுடைய அம்மாவைக் கொலை செய்தேன் என மீடியாக்கள்  சொல்வது உன்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என நான் விரும்புகிறேன். உன்னைப் போலவே, நானும் வருத்தமாகவே  இருக்கிறேன். அதனால் தான் நான் நேரில் இங்கே வந்திருக்கிறேன்.’’

‘`உங்கள் அக்கறைக்கு நன்றி’’ என்று மிகவும் திமிராகப் பதிலளித்த தான்யா, ‘`ஆனால், நான் இதை நம்புவதற்கு இதைவிட வலுவான காரணங்கள் வேண்டும்’’ என்றாள்.

‘`இங்கே பார், நான் இங்கே வந்து இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. இருந்தாலும், இந்தக் காரணத்துக்காக நீ என்னை நம்புவாய் என்று நினைத்துத்தான் வந்தேன். எது எப்படியோ, என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது.’’

அவர் கதவை நோக்கி நடந்து கொண்டே, ‘‘எனக்காக மாள்விகா ஏதாவது வைத்துவிட்டுப் போயிருக்கிறாளா? அப்படி ஏதாவது ஒன்றை நீ கண்டுபிடித்தால் எனக்குத் தகவல் கொடு’’ என்று பேசியபடியே அங்கிருந்து வெளியேறினார்.

தான்யா பதில் எதுவும் சொல்ல வில்லை. அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

அவர் சென்றபின் கதவு மூடப்பட்ட அந்தத் தருணத்திலேயே ‘`பொய்சொல்லி பாஸ்டர்ட்’ என்றாள் தான்யா. ‘‘அவர் சொல்வது எல்லாவற்றையும் நான் நம்பி விடுவேன் என நினைத்தார் போலிருக்கிறது, ரப்பிஷ்!”

‘‘விடு தான்யா. அவர் ஏன் இங்கே வந்து விளக்கணும், அப்படி அவருக்கு என்ன அவசியம்?”

‘`புல்ஷிட், வருண் புல்ஷிட்’’ தான்யா உச்சஸ்தானியில் கத்தினாள். ‘`இவர் சம்பந்தப்பட்டது ஏதோ வொன்று அம்மாவிடம் இருக்கிறது. நாம் அதைக் கண்டுபிடித்து விட்டோமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் அவர் இங்கே வந்திருக்கிறார். அவருடைய சுயநலம்தான் அவருடைய வருகைக்குக் காரணமேயொழிய என் மீதான அக்கறையில்லை’’ என்றாள்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30

‘`தான்யா, அது என்னவாக இருக்க முடியும்?”

‘`நான் இங்கில்லாதபோது அவர் நிறைய முறை இங்கே வந்து அம்மா வோடு நேரத்தை செலவிட்டிருக் கிறார். இருவரும் சேர்ந்து குடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நாளில் அவரைப் பாதிக்கக்கூடிய வகையில் இருக்கும் ஏதாவதொன்றை இங்கே விட்டுச் சென்றிருக்க வேண்டும் அல்லது பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அம்மாவிடம் ஏதாவதொன்றைக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.’’

‘`ஓ, அப்படியா!’’ என்றான் வருண். ‘‘இதுபற்றியெல்லாம் நீ முன்பு பேசியது இல்லையே.’’

‘`நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ஒருமுறை நான் வீட்டுக்கு வந்தபோது காலி செய்யப்படாமல் இரண்டு விஸ்கி க்ளாஸ்களும், சாப்பாடும் மேசை மேல் இருந்தது. அம்மாவை ஒரு பார்வை பார்த்தாலே போதும், அவர் என்ன செய்திருக் கிறார் என்று நீ தெரிந்துகொள்ள முடியும்.’’

‘`ம்ம்ம்ம்…’’ வருண் ஒரு விநாடி யோசனைக்குப் பிறகு, ‘`மந்திரி குடிக்கமாட்டார் என நான் நினைக்கிறேன். உன்னுடைய அம்மா இறந்த அன்று இரவு ஹோட்டலில் மந்திரிக்கு ஏதாவது டிரிங்ஸ் கொண்டு வரட்டுமா  என்று நாம் கேட்டதற்கு உன்னுடைய அம்மா அவருக்கு சாஃப்ட் டிரிங் கொண்டுவரும்படி சொன்னது நினைவிருக்கிறதா?” 

தான்யா தலையை அசைத்துவிட்டு, ‘`அன்றைக்கு அவர் ஃபாஸ்ட்டிங் ஏதாவது இருந்திருப்பார் அல்லது குடிப்பதில்லை எனப் பொய் சொல்லியிருக்கலாம். பொதுவெளியிலும், தனிப் பட்ட இடத்திலும் இவர்கள் முற்றிலும் வெவ்வேறானவர்களாக இருப்பார்கள்.’’

தான்யா சொன்னதைக் கேட்டு வருண் வேகமாகத் தலையாட்டினான்.

‘`நீ சொல்வதே சரியென வைத்துக்கொண்டால், நான் அம்மாவை விட்டு வெளியே இருக்கும்போது, அவருக்கு வேறு யார் `கம்பெனியனாக’ இருந்திருக்கக்கூடும்?’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30

மும்பை

‘`தாங்க் யூ!” என்று சிரித்துக்கொண்டே போன் தொடர்பைத் துண்டித்த சந்தீப், ஆதித்யா அறைக்கு வேகமாகச் சென்றார்.

‘`டிபார்ட்மென்ட் ஆஃப் சைபர் லாஸை’– சேர்ந்த `சைபர் இண்ட்ரூஷன் விங்க்’-கிடம் இருந்து அறிக்கை வந்திருக்கிறது. அவர்கள் நம்மிடம் தவறு எதுவும் இல்லை என `க்ளீன் சிட்’ கொடுத்திருக்கிறார்கள், ஆதித்யா!’’ என்றார்.

ஆதித்யாவின் கண்களில் பிரகாசம். ‘`ரியலி?”

இந்த ஊடுருவல் எந்தவொரு நிறுவனத்திலும் நடந்திருக்க முடியுமென்றும், சிஸ்டம் பாதுகாப்புக்கான அனைத்துத் தேவைகளையும் எடியாஸ் நிறுவனம் நிறைவேற்றியிருக் கிறதென்றும், இந்த `ஹேக்’ நம்முடைய அசட்டையினால் நிகழவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக சந்தீப் கூறினார்.

ஆதித்யாவுக்கு இது மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது. ஏனெனில் அவர், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தனது குழுவினர்மீது எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபிக்க பித்துப் பிடித்தவர்போல, பல ஏஜென்ஸிகளுடன் போராடி வந்தார்.

 ‘`நமது தொழிலை மேலும் விரிவாக்கி வளர்ச்சி காண்பதற்கு இது சரியான நேரம். என்.ஒய்.ஐ.பி-யில் தனது `நோட்டீஸ் பிரீயட்’ முடிந்தவுடன் சுவாமி நம் நிறுவனத்தில் சேர்கிறார். அதன்பின் நாம் ஒரு வலுவான அணியை – நீங்கள், சுவாமி, வருண் – கொண்டிருப்போம். இதைவிட வேறென்ன எனக்கு வேண்டும்? ஒருவேளை, இது நான் ஓய்வு பெறுவதற்கான நேரமாகக்கூட இருக்கலாம்!” என்றார் ஆதித்யா.

`’கமான், ஆதித்யா. வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது என்பது உங்கள் மரபணுவில் இல்லை’’ என்றார் சந்தீப்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல் தடவை அவர்கள் ஜோக்கடித்துக் கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்.

‘`டவுன்ஸ்விலோயின் நிலைமை என்ன?” என ஆதித்யா கேட்டார்.

‘`நோ க்ளூ’’ எனப் பட்டென்று சந்தீப் பதில் சொன்னார். ‘`நீங்கள் இது குறித்து வருணைக் கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

சந்தீப்பின் இந்த மறுமொழி ஆதித்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது, ஆனால், எதுவும் சொல்ல வில்லை. டவுன்ஸ்விலோ குழுவில் வருணை இணைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், அவனது வெற்றியும் சந்தீப்பின்  `அப்செட்’க்குக் காரணமாக இருந்தன.

வருண் நிர்வாகத்தின் கீழ் இண்டீஸ்கேப் நன்கு வளர்ந்து வந்தது. ஃபேஸ்புக்கில் டவுன்ஸ்விலே பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 2 மில்லியனைத் தொட்டிருந்தது. டவுன்ஸ்விலே விளையாடுபவர்களிடம் நியூஸ் ஃபீடும் (newsfeed) திணிக்கப்பட்டு அவர்களது நண்பர்களையும் விளையாட்டில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்படி நண்பர்களை விளையாட வரவேற்பவர்களுக்கு இலவச காயின்கள் கொடுக்கப்பட்டன, அதை கேம் சீட்டுக்காகவும் (Game Cheat), சார்ட் கட்டுக் (short cuts) காகவும் பரிமாறிக்கொள்ள முடியும். விரைவிலேயே இது ஒரு வாழ்க்கை முறை என்கிற நிலையைத் தொட்டது.

(பிட்காயின் பித்தலாட்டம்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்