Published:Updated:

தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்!

தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்!
தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : பல ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த மாவோயிஸ்ட் பாலமுருகன், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்!


2004 ஆம் ஆண்டு, தேனி மாவட்டம் பெரியகுளம் மலைப்பகுதியில் வெளியாட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்று காவல்துறைக்கு தகவல் வந்ததின் பேரில், உளவுத்துறையினர்  விசாரணையில் இறங்கினர்.

மாவோயிஸ்டுகளின் பயிற்சி முகாம் நடப்பதை அறிந்து கொண்ட அவர்கள், மாவட்ட காவல்துறையிடம் தகவல் சொல்ல, அதிரடிப்படையினரை காட்டுக்குள் இறக்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

##~~##
இதில் சில போராளிகள் சிக்கினாலும், முக்கிய நபரான பாலமுருகன் என்பவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிவிட்டார்.  இத்தனை வருடங்களாக போலீசால் தேடப்பட்டு வந்த பாலமுருகன், நேற்று  தானாக முன் வந்து மதுரை ஜெ.எம்.2 வது கோர்ட்டில் சரணடைந்தார்.
பொறுப்பு நீதிபதியான ரவி, பாலமுருகனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பலத்த பாதுகாப்போடு மதுரை சிறையில் பாலமுருகன் அடைக்கப்பட்டார்.
செ.சல்மான்

படம்: ஆர்.எம்.முத்துராஜ்