Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35

வாஷிங்டன் டிசி

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35

ஹென்ரிக்ஸுக்கும், தனக்கும் நடந்த உரையாடலைத் தொடர்ந்து ஏட்ரியன், டானை அழைத்தார். 

‘`ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுகுறித்து அழைப்பு வருகிற தென்றால், இதில் ஏதோ விஷயமிருக்கிறது.’’

‘`ஆமாம். ரிச்சர்ட் நிக்சன் – வாட்டர்கேட் ஊழல் நினைவிருக்கிறதா? இதுவரை பேசியதிலேயே மிகவும் பிரபலமான ஒன்பது வார்த்தைகள், அந்த வார்த்தைகள் தேசத்தையே ஒரு குலுக்கு குலுக்கியெடுத்தது!’’ என்றார் டான்.

‘`டான், ப்ளீஸ்! கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்!’’

‘`1973-ல் வாட்டர்கேட் ஊழல் உச்சத்தில் இருந்தபோது, ஜனாதிபதி நிக்சன் ஊடகத்தில் பேசும்போது, ‘`there can be no whitewash in the White House’’ எனக் கூறினார். இந்த ஒன்பது வார்த்தைகள் அமெரிக்க தேசத்தைச் சேர்ந்தவர்களையே அவர்களுடைய ஜனாதிபதிக்கு எதிராகத் திருப்பியது. அதுவரை, ஒயிட் ஹவுஸ் எந்தவொரு மூடிமறைக்கும் காரியத்துடனும் தொடர்புப்படுத்திப் பேசப்பட்டதில்லை. அவர் தானாக முன்வந்து மறுத்ததே வரலாறு படைத்தது. உரையாடலில் எதிர்மறை இருந்தால், அது மூடிமறைப்பதற்கு என்றே அர்த்தம், ஏட்ரியன்’’ என்றார்.

‘`அப்படியென்றால்..?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35

‘`நாம் எதையாவது நாம் கண்டுபிடித்து விடுவோம் என்கிற பயம் அவருக்கும், ஒருவேளை ஜனாதிபதிக்கும்கூட இருக்கலாம். நீங்கள் சமீபத்தில் செய்திருக்கும் விஷயம் அவர் கவனத்தைக் கவர்ந்திருக்கக்கூடும்.’’
‘`அது டானின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது.’’

ஏட்ரியன் அனைத்துவகையான தொடர்பு களையும் மனதுக்குள் ஓடவிட்டார். டான் பாருக்குள் நுழைந்து மதுபான பாட்டிலுடனும், மூன்று க்ளாஸ்களுடனும் திரும்பியவர், டோனியைப் பார்த்து, ‘`உங்களுக்கு ஐஸ் வேண்டு மென்றால் கீழ்தளத்திலிருந்து கொண்டுவர வேண்டும்’’ என்றார். அவர் மூன்று க்ளாஸ்களில் மதுவை ஊற்றினார்.

‘`ஆல்டாயிட்ஸ்… பிட்காயின்டாட் ஓஆர்ஜி-யில் அவர் அளித்திருந்த விளம்பரம் பற்றி பேசுவோம். அந்த விளம்பரம் மிகவும் வெளிப்படையாக இருந்தது. அதில், ‘`ஆற்றலை முறையாகப் பயன்படுத்த தேவையற்ற ஓர் உலகில் வாழ்வதற்கான அனுபவத்தை மக்களுக்குத் தருவதற்காகப்  பொருளாதார ஒப்புருவாக்கத்தை  (simulation) நான் உருவாக்கி வருகிறேன். TOR-ல் நிபுணத்துவம் பெற்ற ஐ.டி தொழில்வல்லுநர் தேவைப் படுவதுடன், பிட்காயின் உலகத்தை ஏற்றுக்கொள் வதில் விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘`அப்படியென்றால்..?’’

‘`அவர், பிட்காயின் உலகத்தை உருவாக்க விரும்பு கிறார். எல்லையற்ற உலகம். அரசாங்கத்தின் கட்டுப்பாடு இல்லாமல் பணப் பரிமாற்றம் தாராளமாக நடக்கும். எல்லோரும் அநேமதேயமாக, சுதந்திரமாகச் செயல்படு வார்கள்.’’ 

‘`பிட்காயினை உருவாக் கிய  லிபர்ட்டேரியன் சதோஷி நகாமோட்டோ தானே! அல்லது, ஆல்டா யிட்ஸ்தான் பிட்காயினை உருவாக்கினாரா?”

‘`அதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், காட்டன் ட்ரெயிலை உருவாக்கியவர் ஆல்டாயிட்ஸ்தான். தவிர, Frosty@Frosty.com யாரென்று நமக்குத் தெரியாது. ஆனால்,             எஃப்.பி.ஐ-யிடம் காட்டன் ட்ரெயிலுக்கான மூலக் குறியீடு (source code) இருக்கிறது. எட் வால்ஷ் உங்களிடம் கூறினார்தானே?” ஏட்ரியன் தலையசைத்தார்.

‘`காட்டன் ட்ரெயில் சட்டப்பூர்வமானது இல்லை என்னும்பட்சத்தில் அதை நிர்வகிப்பவர் ஒரே இடத்திலிருந்து தொடர்ந்து லாக்-இன் செய்யமாட்டார். கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டுமென வரும்போது பாதிப்பும் இருக்கும். எனவே, அவர்கள் எப்போதும் இயக்கத்திலேயே இருக்க வேண்டும்.’’

‘`உண்மைதான்.’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35

‘`இருப்பினும், காட்டன் ட்ரெயிலின் மூலக் குறியீட்டை நாங்கள் ஆய்வு செய்து பார்த்தபோது அட்மின் பகுதி தனித்துவமான ஐ.பி அட்ரஸி லிருந்துதான் நுழைய முடியும் எனத் தெரியவந்தது. அதாவது, யாரோ ஒருவர், ஒரே கணினியிலிருந்து லாக்-இன் செய்திருக்க வேண்டும் அல்லது ஒரே வைஃபை ரெளட்டரைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது.’’

ஏட்ரியன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

‘`…….Frosty அல்லது ஆல்டாயிட்ஸ் அல்லது வேறு யாராவது ஒருவர், வி.பி.என்–ஐ (Virtual Private Network) அல்லது காட்டன் ட்ரெயிலில் லாக்-இன் செய் வதற்குப் பயன்படுத்தாத பட்சத்தில்…’’
‘`எப்படி இதை எளிதாகச் சொல்லமுடியும் டான்?’’

‘‘அவர்கள் வி.பி.என்–ஐ பயன்படுத்தியிருந்தால் எங்கேயிருந்து வேண்டு மென்றாலும் காட்டன் ட்ரெயிலை லாக்-இன் செய்ய முடியும். வி.பி.என்–ஐ பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் குறியீடு மூலம்தான் உள்ளே நுழைய முடியும். வி.பி.என், காட்டன் ட்ரெயில் மூலக்குறியீட்டில் ஹார்ட்கோட் (Hardcode) செய்யப்பட்டிருக்கும் தனித்துவமான ஐ.பி முகவரியைச் சூழ்ச்சி செய்து, அந்தக் குறியீட்டைத் தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் அவர் களுக்குத் தேவையான மொபிலிட்டியும், பாதுகாப்பும் கிடைத்துவிடும். பொதுவாக, வங்கிகள் இதைப் பயன்படுத்தும். இன்டர்நெட் பேங்கிங் சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், அவர்களுடைய பாஸ்வேர்ட்டைப் பயன்படுத்தி வி.பி.என் மூலமாக லாக்-இன் செய்வார்கள்.’’

‘`சரி’’ என்று ஏட்ரியன் தலையசைத்தார். அவருக்கு முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் தொடர்ந்து நடக்கும் உரையாடலின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என நினைத்தார்.
‘`இரண்டு மாதங்களுக்குமுன்பு Frosty@Frosty.com என்கிற மின்னஞ்சல் அக்கவுன்ட்டுக்குள் வாஷிங்டன் டிசி-யில் இருக்கும் இன்டர்நெட் கஃபே மூலம் நுழைந்திருக்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு அமைதியானார். ‘‘இந்த மின்னஞ்சலுக்குள் நுழைவதற்கு இரண்டு நிமிடங்களுக்குமுன் வி.பி.என் நெட்வொர்க்கையும், அதே இண்டர்நெட் கஃபேயில், அதே கணினி மூலம் அணுகியிருக்கிறார்கள். வி.பி.என் சேவை வழங்குபவர் சட்டத்துக்குப் பயந்தும், அவரது உரிமம் தடை செய்யப்பட்டுவிடும் எனக் கருதியும் இன்று காலை எனக்கு விபரங்களை அளித்தார்’’.

‘`ஃப்ராஸ்டியும், ஆல்டாயிட்ஸும் ஒரே நபர்தான் என்று நீங்கள் சொல்கிறீர்களா?”

‘`ஆமாம். ஆல்டாயிட்ஸும், ஃப்ராஸ்டியும் ஒரே நேரத்தில் ஒரே இன்டர்நெட் கஃபேக்குச் சென்று ஒரே கணினியைப் பயன்படுத்தாமல் இருந்திருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக ஆல்டாயிட்ஸ் அட்மின்களில் ஒருவர்’’.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35

ஏட்ரியன் முகத்தில் சோகத்தின் களையைப் பார்த்த டான் மேலும், ‘‘நம்முடைய நண்பர் மிகவும் கவனமாக இல்லாததால், போகிற இடத்திலெல்லாம் தடயத்தை விட்டுப் போயிருக்கிறார். எனவே, அவரைக் கண்டிப்பாக நாம் அடைந்துவிடுவோம். அவர் நினைப்பதுபோல, அவர் அவ்வளவு ஸ்மார்ட் இல்லை.’’

ஏட்ரியன், டானுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்திருக்கும்போது டான் அவரிடம் சில பேப்பர்களைத் தந்தார். ‘`இதை சாட்சியாகப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் கூகுளிட மிருந்தும், வி.பி.என் சேவை வழங்குபவர் களிடமிருந்தும் நாம் அதிகாரப்பூர்வமாக இதைப் பெறவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டுமெனில், நீங்கள் முறையான செயல் முறையைப் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

‘`தாங்க்ஸ் டான்’’ என்ற ஏட்ரியன் அவர் கொடுத்த பேப்பர்களை வாங்கிக்கொண்டார். அவர் அதை டானுக்குக் கொடுக்கப் போகும்போது இன்டர்நெட் கஃபே இருந்த இடம் வரைபடத்தில் இருப்பதைப் பார்த்தார். ‘`இங்கேதான் கடைசி லாக்-இன் பதிவாகியிருந்ததா?’’

‘`ஆமாம், அங்கேதான்’’ என்றார் டான்.

‘`இது சாத்தியமில்லை.’’ ஏட்ரியனுக்கு என்னவாயிற்று என அவரைப் பார்த்து டோனி குழம்பிப் போயிருக்கையில், டானும் என்னவாயிற்று எனத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்.

‘`அது டானின் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில்தான் இருக்கிறது.’’

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்