தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் கொலைக் குற்றவாளிகளை விடுதலைசெய்ய கவர்னர் மறுப்புத் தெரிவித்தும், விடாப்பிடியாக மீண்டும் பரிந்துரையை அனுப்பி, அவர்களை ரகசியமாக விடுதலை செய்துள்ளது தமிழக அரசு. இந்த நிலையில், ‘13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை விடுதலைசெய்த கவர்னர், 28 ஆண்டுகள் சிறையில் உள்ள ஏழு பேர் விடுதலையைத் தள்ளிப்போடுவதன் காரணம் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுதான்’ என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 1,627 கைதிகள் கவர்னர் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர். அதன்படி, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கொலைக் குற்றவாளிகளான நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரை விடுதலை செய்ய முதலில் கவர்னர் மறுத்துவிட்டார். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மீண்டும் கவர்னருக்குப் பரிந்துரைத்தது. கவர்னர் இதை ஏற்றதால், மூவரும் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டனர்.

அதேநேரம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. அதன்மீது எந்த நடவடிக்கையையும் கவர்னர் தரப்பில் எடுக்கவில்லை. இதுதான் சர்ச்சையாகியுள்ளது. ‘மூன்று பேருக்கு ஒரு நீதி, ஏழு பேருக்கு வேறு நீதியா?’ என்று கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.

மூவர் விடுதலை தொடர்பாக கவர்னர் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், ‘‘தமிழக அரசு 1,858 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலைசெய்ய முடிவெடுத்து அரசியல் சட்டம், பிரிவு 161-ன் படி கவர்னர் மாளிகைக்கு ஆவணங்களை அனுப்பியது. அந்தப் பட்டியலில் இருந்த தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தொடர்புடைய மூவர் குறித்த ஃபைல், கவர்னரால் ஆய்வு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அரசின் மறுபரிசீலனைக்குப் பிறகு அக்டோபர் மாதம் கவர்னருக்கு அந்த ஃபைல் மீண்டும் அனுப்பப்பட்டது. மேலும், இந்த மூவர் விடுதலை குறித்துத் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் ஆகியோர் கவர்னரைச் சந்தித்து, ‘கொலை செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில் அவர்கள் அங்கு வரவில்லை; உணர்ச்சிவசப்பட்டு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது’ என்று தெரிவித்தனர். அதையடுத்து, மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்” என்று கூறப்பட்டிருக்கிறது.

அதேசமயம் அ.தி.மு.க தரப்பில், ‘மூவர் விடுதலைக்குக் காட்டிய அக்கறையை ஏழு பேர் விடுதலையில் காட்டவில்லை’ என்கிற விமர்சனத்தை ஏற்க மறுக்கிறார்கள். “நாங்கள் எடுத்த முயற்சிகளை நாடே அறியும். அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது உட்பட எங்களால் என்னென்ன முயற்சிகளை எடுக்க முடியுமோ அத்தனையும் செய்துள்ளோம்” என்கிறார்கள் அவர்கள். மேலும் சில உள்விவரங்கள் குறித்து அவர்கள் கூறுகையில், “மூவர் விடுதலை வழக்கு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி விசாரித்த வழக்கு. அதனால், அதுகுறித்து தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்படவேண்டிய நிலை இருந்தது. ஆனால், ஏழு பேர் வழக்கு மத்திய அரசின் சி.பி.ஐ விசாரித்த வழக்கு. உச்ச நீதிமன்றத்திலேயே, ஏழு பேரை விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனாலும், மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், மாநில அரசும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் அளித்தது. அதுவரை எல்லாம் சரியாகப் போனது.

அதன் பின்பு கவர்னர் மத்திய அரசிடம் ஆலோசித்துள்ளார். அப்போது மத்திய அரசு ‘இந்த விஷயத்தில் அவசரப்பட வேண்டாம்’ என்று கவர்னருக்கு அறிவுறுத்தியுள்ளது. இவர்களை விடுதலை செய்தால், இதே காரணத்தை முன்வைத்து, குண்டுவெடிப்பு வழக்குகளில் பல மாநிலங்களில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்பார்கள். இலங்கை அரசைத் தேவையில்லாமல் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதில் சர்வதேசப் பிரச்னைகளும் உள்ளன என்று கவர்னரிடம் சொல்லப்பட்டுள்ளது. இதனால் ஏழு பேர் விவகாரத்தில் கவர்னரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. மத்திய அரசு மனது வைத்தால் மட்டுமே ஏழு பேர் விடுதலை சாத்தியம்” என்றார்கள்.
பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் கே.டி.ராகவன், “மூன்று பேர் விடுதலையையும், ஏழு பேர் விடுதலையையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அந்த ஏழு பேரில் நான்கு பேர் வெளிநாட்டினர். இந்த மூவர் விடுதலைக்கு முன்பாக பலரையும் விடுதலை செய்துள்ளனர். அதே நடைமுறையில்தான் மூவர் விடுதலையையும் பார்க்க வேண்டும். பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, இந்நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்தில் மாற்றமில்லை. இதனால், மத்திய அரசின் ஆலோசனையை கவர்னர் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை” என்றார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன், “மூன்று பேர் விடுதலைக்குக் காட்டிய அக்கறையை மாநில அரசு ஏழு பேர் விஷயத்தில் காட்டவில்லை. கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும்போது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வைத்திருக்க வேண்டும். காந்தியைக் கொன்ற மூன்று பேரை 16 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்தவர்கள், இந்த ஏழுபேர் விடுதலையைத் தள்ளிப்போடுவது நியாயமற்றது” என்றார்.

தி.மு.க செய்தித் தொடர்பாளரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், “தமிழக அரசின் தீர்மானத்தின் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி இரண்டாவதாக மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பலாம். அதில் நுணுக்கமாகவும் கவனமாகவும் சட்ட அறிவைக் கொண்டு அணுக வேண்டும். ராஜீவ் படுகொலை வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும்போது, இத்தனை ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க கவர்னர் தயங்கக் கூடாது” என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்,“அரசியல் சட்டப் பிரிவு 161-ன் படி, மாநில அரசு அனுப்பும் தீர்மானத்தின் மீது கவர்னர் நடவடிக்கை எடுத்தால் அதை நீதிமன்றமோ, மத்திய அரசோ கேள்வி எழுப்ப முடியாது. தமிழக அரசு ஒரு முடிவை எடுத்து கவர்னருக்கு அனுப்பும்போது, அதை ஏற்றுக் கொள்வதுதான் மரபு. மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பணிந்து அரசியல் லாபங்களுக்காகக் காய்களை நகர்த்துவது யாருக்குமே நல்லது அல்ல” என்றார்.

இதேபோல, ‘எழுவர் விடுதலைக்கான பெண் வழக்குரைஞர்கள் - தமிழ்நாடு’ கூட்டமைப்பின் வழக்கறிஞர்களான வடிவாம்பாள், சுஜாதா, அங்கயற்கண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “28 ஆண்டுகாலச் சிறைவாசிகள் என்கிற அடிப்படையிலும், சட்டப்படி எந்தவிதத் தடையுமின்றி அவர்கள் விடுதலையாகத் தகுதியுள்ளவர்கள் என்ற அடிப்படையிலும் அவர்களை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. எழுவரின் சிறை வாழ்க்கையில் அவர்கள் சிறை விதிகளைப் பின்பற்றி வருவதுடன், நன்னடத்தை தகுதியையும் பெற்றுள்ளனர். எனவே, அவர்களை விடுவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. எதுவும் நடக்கலாம்!

- அ.சையது அபுதாஹிர்