Published:Updated:

`விபசார முத்திரை குத்துவதா?’ - இந்தோனேசிய பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

`விபசார முத்திரை குத்துவதா?’ - இந்தோனேசிய பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
`விபசார முத்திரை குத்துவதா?’ - இந்தோனேசிய பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விபசார வழக்கில் பிடித்துச் சென்று அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்ட, மசாஜ் சென்டரில் பணியாற்றிய இந்தோனேசிய பெண்ணுக்கு 2.5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`விபசார முத்திரை குத்துவதா?’ - இந்தோனேசிய பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை நீலாங்கரையில் உள்ள மசாஜ் சென்டரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், நீலாங்கரை ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். பின்னர், மசாஜ் சென்டர் உரிமையாளர் மீது விபசார தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அங்கு வேலை பார்த்த இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் உள்ளிட்டோரைப் பாதிக்கப்பட்ட நபர்களாகக் குறிப்பிட்டு, மயிலாப்பூரில் உள்ள அரசுக் காப்பகத்தில் சேர்த்தனர். 

அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட தனக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, நீலாங்கரை ஆய்வாளருக்கு உத்தரவிடக் கோரி  இந்தோனேசியாவைச்  சேர்ந்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல, தங்களை விடுவிக்க கோரி மற்ற பெண்களும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மேலும், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என, மசாஜ் மையங்களின் உரிமையாளர்களும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மசாஜ் என்பது அறிவியல்பூர்வமான சிகிச்சை முறை எனவும், ஆதிகாலம் தொட்டு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும்  கூறி, மசாஜ் சென்டர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், மசாஜ் சென்டர்களில் உண்மையாக விபசாரம் நடைபெறுவதாக ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தால் அவற்றின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, ஆதாரங்கள் இல்லாமல் தொழில்முறையிலான மசாஜ் சென்டர்கள் மீது விபசார முத்திரை குத்துவதை ஏற்க முடியாது எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இருந்து முறையான அனுமதி பெற்று இந்தியாவில் வேலை பார்க்க வந்த பெண்ணின் உரிமையைப் பறிக்கும் வகையில் அவரை 26 நாள்கள் அரசுக் காப்பகத்தில் அடைத்ததற்கு அரசு, இழப்பீடு வழங்கியே தீர வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். அந்த தொகையை நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரிடம் இருந்து பிடித்தம் செய்துகொள்ளவும் உத்தரவிட்டார்.