Published:Updated:

நமக்கும் கடமை இருக்கிறது!

நமக்கும் கடமை இருக்கிறது!
பிரீமியம் ஸ்டோரி
நமக்கும் கடமை இருக்கிறது!

நமக்கும் கடமை இருக்கிறது!

நமக்கும் கடமை இருக்கிறது!

நமக்கும் கடமை இருக்கிறது!

Published:Updated:
நமக்கும் கடமை இருக்கிறது!
பிரீமியம் ஸ்டோரி
நமக்கும் கடமை இருக்கிறது!

ருமா வராதா... நடக்குமா நடக்காதா என ஏகப்பட்ட குழப்பங்களும், சந்தேகங்களும் இருந்த நிலையிலும், ஒற்றைப்பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடையை ஜனவரி 1 முதல் முழுவதுமாக அமல்படுத்திவிட்டது தமிழக அரசு. கடந்த ஜூன் மாதமே அறிவிக்கப்பட்ட இந்தத் தடை, தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கால் கொஞ்சம் கேள்விக்குறியாகியிருந்தது. ஆனால், அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிளாஸ்டிக் தடைக்கு ‘பச்சைக்கொடி’ காட்டவே, எவ்விதச் சிக்கலுமின்றி அமலுக்கு வந்தது அரசின் அறிவிப்பு.

நமக்கும் கடமை இருக்கிறது! பிளாஸ்டிக் பயன்பாட்டால் இன்று உலகின் மொத்தச் சூழலியலும் சீரழிந்துவிட்டது. சுற்றுலாத்தலங்களும் நீர்நிலைகளும் பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பால் திணறுகின்றன. வெள்ளத்தின்போது சென்னை நகரம் நீரில் மூழ்கியதற்கு வாய்க்கால்களில் அடைத்து நின்ற பிளாஸ்டிக் குப்பைகளே காரணமாக அமைந்தன. விலங்குகளும் பிளாஸ்டிக் பைகளைத் தின்று பாதிப்புக்கு உள்ளாகின. ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சென்று கலக்கின்றன. இப்படி பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

‘பிளாஸ்டிக் தடை’ என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கான பலன்களை முதல்நாளே பல இடங்களில் காணமுடிந்தது. பூக்கடைகள், இறைச்சிக்கடைகள், பழக்கடைகள் போன்ற சின்னச்சின்னக் கடைகளில் கூட பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, வாழையிலை, மந்தாரை இலை, தையல் இலை, தாமரையிலை, தேக்கிலை, பாக்குமட்டை, தென்னங்கீற்று மற்றும் பனையோலைக் கூடைகள் ஆகியவை பயன்பாட்டுக்கு வந்தன. ஆங்காங்கே பல உணவகங்கள் பொதுமக்களிடம் பாத்திரங்கள் எடுத்துவரச் சொல்லி அறிவுறுத்தின. கையோடு துணிப்பை மற்றும் பாத்திரம் கொண்டுவந்து வாங்கும் வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாகப் பொருள்களின் விலையில் தள்ளுபடிகூட  அறிவிக்கப்பட்டன. பெரிய ஜவுளிக்கடைகளில் துணிப்பைகள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தன. பாரம்பர்ய அடையாளமான மஞ்சள் பை மீண்டும் உற்சாகத்துடன் புழக்கத்துக்கு வந்தது.

ஆனாலும் இன்னும் சில வணிகர்கள் பிளாஸ்டிக்கை அகற்றும் மனநிலைக்கு மாறவில்லை. ‘பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் சாக்லெட், பிஸ்கட் என்று பல பொருள்கள் பிளாஸ்டிக் தாள் சுற்றப்பட்டு வருவதை எப்படித் தடுக்கப்போகிறோம்’ என்கிற கேள்விகளும் இருக்கின்றன. எப்படி இருந்தபோதும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நம் அடுத்த தலைமுறையையும் காப்பாற்றுவதற்கான அத்தியாவசியச் செயல்பாடு.

எந்தவொரு சட்டமும், விதிமுறையும் வெறும் காகிதங்களில் இடப்படும் கையொப்பங்களால் மட்டும் வெற்றியடைந்துவிடுவதில்லை. அவற்றை அமல்படுத்தும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளால்தான் அதன் வெற்றியும் தோல்வியும். இந்தமுறை அந்தக் கடமை அரசோடு நின்றுவிடாமல், மக்களாகிய நமக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே, நம் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பிளாஸ்டிக் இல்லாத் தமிழகம் சாத்தியம். சாத்தியப்படுத்துவோம், சாதிப்போம்!