Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 44

பிட்காயின் பித்தலாட்டம் - 44
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 44

ஓவியங்கள்: ராஜன்

பிட்காயின் பித்தலாட்டம் - 44

ஓவியங்கள்: ராஜன்

Published:Updated:
பிட்காயின் பித்தலாட்டம் - 44
பிரீமியம் ஸ்டோரி
பிட்காயின் பித்தலாட்டம் - 44

மும்பை

டீலை முடிப்பதற்காக உக்ரைனுக்குச் சென்றிருக்கும் வருணின் பிரிவால் தான்யா மட்டும் தனிமையில் வாடவில்லை.  ஆதித்யாவுக்கும் அந்த உணர்வு இருந்தது. உக்ரேனிய கேமிங் நிறுவனத்துடன் நடந்துவரும் பேச்சுவார்த்தை குறித்து தினமும் இரவு வருணுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஆதித்யா.

அன்றிரவு வருணுடன் பேசியபிறகு, அவர் தூங்க முயன்றார். ஆனால், முடியவில்லை. எழுந்து கம்ப்யூட்டரை லாக்-இன் செய்தார். வழக்கமான சில மெயில்களுக்குப் பதில் அளித்தார். நன்றி தெரிவித்து ஏட்ரியன் அனுப்பியிருந்த மெயிலைப் புறக்கணித்தார். எஃப்.பி.ஐ அவரை விசாரித்தது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. வேர்ல்டு கேமிங் கவுன்சிலிலிருந்து (World Gaming Council)  மெயில் வந்திருந்தது. அதை வாசிக்க ஆரம்பித்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - 44

‘‘டியர் மிஸ்டர். ராவ்,  தி வோர்ல்டு கேமிங் கவுன்சில் அக்டோபர் மாதம் 28-30-ம் தேதி வரை வாஷிங்டன் டி.சி-யில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இண்டீஸ்கேப் கார்ப்பரேஷன் இரண்டு பிரிவுகளில் (1. Fastest     growing gaming company in the world, 2. Best gaming company in   emerging markets) பரிசுக்காகப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நிறுவனத்தின் சார்பாக நீங்கள் நேரில் வந்து பரிசை (எந்தவொரு பிரிவில் வெற்றி பெற்றாலும்) பெற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்கும். 

விழா நடைபெறும் ரிட்ஷ் கார்ல்டன் ஹோட்டலில் நீங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன், இந்தியாவிலிருந்து வாஷிங்டன் டி.சி வந்து செல்ல பிசினஸ் க்ளாஸ் டிக்கெட்டும் ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. நீங்கள் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தவும்” எனச் சொல்லப்பட்டிருந்தது. 

ஆதித்யாவை உற்சாகம் தொற்றிக்கொண்டது. கேமிங் உலகில் இண்டீஸ்கேப்பின் பங்களிப்புக்கு இப்போதுதான் முதல்முறையாக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதுவும் சர்வதேச அமைப்பால். உற்சாகம் குறையாமல் உடனடி யாக வருணை அழைத்து, வாசித்துக் காண்பித்தார்.

“முதலில் ஆப்பிள் ஸ்டோரில் முதலிடம், இப்போது இந்த அங்கீகாரம்! உனக்குத் தகுதி யிருக்கிறது. பரிசு வாங்குவதற்கு நீ அங்கு வருவாய் என நான் அவர்களுக்கு எழுதுகிறேன்.”

“டாட், அவர்கள் உங்களை அழைத்திருக்கிறார்கள். நீங்கள் அவசியம் போகவேண்டும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்காயின் பித்தலாட்டம் - 44

“இல்லை வருண். இது உனக்கானது. கடந்த சில மாதங்களாக நீ இதற்காக அயராமல் உழைத்திருக்கிறாய்.”

“டாட், 28-ம் தேதி தான்யாவின் பிறந்தநாள். நான் வரவில்லையென்றால் அவள் என்னை துவம்சம் செய்துவிடுவாள்.”

“நான் அல்லது எனது மகன் வருண் விழாவில் கலந்துகொள்வோம் என்று பதில் கடிதத்தில்  குறிப்பிட்டார்.

வாஷிங்டன் DC

கன்ஃபெஷன்ஸ் ஆஃப் த ஹூக்கருடன் (Confessions of the Hooker) அமெரிக்க ஒன்றிப் போய்விட்டது. வாரத்துக்கு மூன்று முறை ஹூக்கர் தனது அனுபவத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். தேசிய அளவில் இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகிப்போனது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, பத்திரிகைகள் என அனைத்திலும் இது பேசப்பட்டு வந்தது.

வெள்ளிக்கிழமைக் காலை ஆதித்யா வாஷிங்டன் டி.சி-யில் தரையிறங்கினார். இரண்டு ஸ்டாப் ஓவர்கள் என்பதால், அவருக்கு அலுப்பு அதிகமாக இருந்தது. அவரை அழைத்துச் செல்வதற்காக ரிட்ஷிலிருந்து வந்த ஒருவர், அவர் பெயர் பொறித்த அட்டையுடன் காத்துக் கொண்டிருந்தார். ஆதித்யா அவரைப் பார்த்து சமிஞ்ஞை காட்டிவிட்டு, பார்க்கிங் பகுதியை நோக்கிச் செல்கையில், வருணை அழைத்து, தான்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி கூறினார்.

வண்டி ஹைவேயை அடைந்த 40 நிமிடங்களில் அவர்கள் ரிட்ஷில் இருந்தார்கள். அவர் செக்-இன் செய்தபின், ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் அவரை அவரது அறைக்குக் கூட்டிச் சென்றார்.

குளித்து, உடையெல்லாம் மாற்றிக்கொண்டபின் அங்கிருந்த காபி மேக்கரிலிருந்து காபி எடுத்துக்கொண்டு உட்கார்ந்தார். அவர் லேப்டாப்பை லாக்இன் செய்ய நினைத்தபோது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
கறுப்பு சூட் அணிந்த இரண்டு வெள்ளையர்கள் வெளியே நின்றிருந்தனர்.

“மிஸ்டர். ராவ்... எங்களோடு நீங்கள் வர முடியுமா? விழா நடைபெறவிருக்கும் இடத்தில் ட்ரை ரன் (try run) பார்க்கவேண்டியிருக்கிறது.”

ஆதித்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு ட்ரை ரன் செய்வார்கள் என்பதை அவர் அதுவரைக் கேட்டதில்லை. ஆனால், அவர்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் என்பதால் எதுவும் கேட்காமல், உடையை மாற்றிக்கொண்டு வருவதாகச் சொன்னார்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆதித்யா லாபியில் இருந்தார். வெளியே காத்திருந்த காரைக் காட்டிய இரண்டு பேருடன் அவரும் அதில் ஏற, காருக்குள் அதே உடையில் மேலும் இருவர் இருந்தனர். ஒருவர் வண்டி ஓட்டிக்கொண்டி ருந்தார். இன்னொருவர் பயணி யின் சீட்டில் உட்கார்ந்திருந்தார். டி.சி-யின் சாலையில் வண்டி சென்றுகொண்டிருந்தது. காரில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் ஆதித்யா காரில் ஏறியதிலிருந்து எதுவும் பேசவில்லை. அதிகாலை நேரம் என்பதால், சாலைகளில் ட்ராஃபிக் சற்று குறைவாக இருந்தது.  20 நிமிடங்களுக்குப் பிறகு பக்கவாட்டிலிருந்த நுழைவாயில் வழியாக ஒரு பெரிய கட்டட வளாகத்துக்குள் வண்டி நுழைந்தது.

“இதுதான் விழா நடக்கவிருக்கும் இடமா?”

யாரும் பதில் பேசவில்லை.

“நான் கேள்வி கேட்டேன்” என்றார் ஆதித்யா கடுப்புடன். யாரும் அவருக்குப் பதில் சொல்லவோ அல்லது அவரைப் பார்க்கவோ இல்லை. “இப்படித்தான் நீங்கள் விருந்தினர்களை நடத்து வீர்களா?” எனக் குரலை உயர்த்தி கோபத்துடன் கேட்கும்போது பீதியும் தொற்றிக்கொண்டது. வண்டி கீழ்த்தளத்திலிருந்து பார்க்கிங் பகுதியை அடைய, அதிலிருந்து மூன்று பேர் வெளியே வந்தனர்.

ஆதித்யாவுக்கு வலதுபக்கம் உட்கார்ந்திருந்த நாலாவது ஆள், அவரைப் பார்த்து கடுமையாக, “காரிலிருந்து இறங்குங்கள் மிஸ்டர் ராவ்” என்றார்.

பதைபதைப்புடன், “நீங்கள் யார்?” எனக் கேட்டார். 

“எங்களைப் பின்தொடர்ந்து வாருங்கள், விரைவில் தெரியவரும்” என்று சொல்லிக் கொண்டே கடைசி ஆளும் வண்டியிலிருந்து இறங்கினார்.

ஆதித்யா சுற்றிலும் பார்த்தார். கீழ்த்தளம் காலியாக இருந்தது. காரிலிருந்து இறங்கி அவர்களைப் பின்தொடர்ந்து செல்வதைத் தவிர, வேறெதுவும் அவருக்குத் தெரியவில்லை. அவர் சந்தீப் அல்லது வருணுடன் பேசுவதற்காகப் போனை எடுத்தார். ஆனால், சிக்னல் இல்லை. அந்தக் கட்டடத்தில் `jammers’ பொருத்தப் பட்டிருந்தன. ஆதித்யாவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

பிட்காயின் பித்தலாட்டம் - 44

மும்பை

விமானத்திலிருந்து இறங்கியதும் விமான நிலையத்திலிருந்து ஆதித்யா வருணை அழைத்தபோது அவன் ஆபிஸில்தான் இருந்தான். ஏற்கெனவே நேரம் ஆகிவிட்டிருந்தது, பிறந்தநாள் டின்னருக்கு தான்யாவையும் அழைத்துச் செல்ல வேண்டுமென்பதற்காகக் கிளம்பிக்கொண்டி ருந்தான். மும்பையின் புறநகர் பகுதியில் இருக்கும் க்ராண்ட் ஹயத் ஹோட்டலின் செலினிக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்தான். ஏற்கெனவே இரண்டு பேருக்கான டேபிள் ஒன்றுக்கு முன்பதிவு செய்திருந்தான்.

“தான்யா, நீ ரெடியா?” போனில் அழைத்துக் கேட்டான்.

“காத்திருக்கிறேன். பசிக்கிறது” என்றாள்.

“நான் வர அரை மணி நேரம் லேட்டாகும் பேபி. அவசரமா ஒரு வேலை வந்துருச்சு, அதை முடிச்சுட்டுக் கிளம்புகிறேன். அதை இப்ப செய்யலைன்னா, திங்கள்கிழமை வரை செய்ய முடியாது” என்றான்.

“நான் என்ன சொல்றேன்னா, நீ வேலை பாரு, நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்’ என்றாள்.

இருபது நிமிடங்களில் அவள் வருணின் ஆபிஸில் இருந்தாள். அவள் உள்ளே நுழைந்தபோது அவளைக் கட்டியணைத்துக்கொண்டான்.

“பார்க்கவே நீ ரொம்ப…’” அவனுக்கு சரியான சொல் கிடைக்கவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு, “யம்மி!” என்றான்.

“இதுக்கு இவ்வளவு நேரம் யோசிக்கிற, இல்ல?”

“சரியான வார்த்தை வேணும்ல தான்யா! இன்னைக்கு தப்பா எதுவும் சொல்லிடக் கூடாதில்லையா” என்று அவனுடைய கன்னக்குழி தெரிய சிரித்தான்.

“நீ  டின்னருக்குப் போகணுமா, இல்லை டின்னருக்கு இந்த யம்மி பேபி வேணுமா?” என ஒரு சோபாவில் உட்கார்ந்து கொண்டு கிறக்கத்துடன் கேட்டாள்.

அவன் அவளருகில் சென்று குனிந்து உதடுகளில் முத்தம்  கொடுத்தான். தான்யா ஒரு கிரேஸி மூடில் இருந்தாள்.

“இங்கே சி.சி.டி.வி கேமரா இருக்கு பேபி” என்றான்.

“கேமரா இல்லாத இடத்துக்கு கூட்டிட்டுப் போ” என்றவள், ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு “வா, உன்னோட அப்பா ரூமுக்கு போகலாம். அங்கே மரத்தினால் ஆன கதவு இருக்கிறது, நான் பார்த்திருக்கிறேன்” என்று அவனை இழுத்துக்கொண்டு செல்ல, ஈருடல்கள் ஓருடல் ஆனது.

இனிமையான தருணங்களுங்குப்பிறகு, வருண் எழுந்தான். தான்யா, ஆதித்யாவின் பிரைவேட் வாஷ்ரூமுக்குள் சென்றாள். தான்யா உள்ளே இருக்கும்போது, வருணை அங்கு வேலை பார்க்கும் ஒருவர் கூப்பிட்டார்.
“ஹோல்ட் ஆன், ஹோல்ட் ஆன், டூட். நாம் அதைச் சரிசெய்துவிடலாம். சொல்லப் போனால் இதற்கு நீங்கள் கேமிங் டைரக்டரைத்தான் கூப்பிட்டிருக்க வேண்டும்.”

வாஷ்ரூமிலிருந்து சிரித்துக்கொண்டே வெளியேவந்த தான்யா பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். வருண் போனில் பேசிக்கொண்டே அவளைப் பார்த்து ஒரு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் அவனை லேசாகத் தட்ட, அவன் போனை ம்யூட்டில் வைத்துவிட்டு, “நான் பத்து நிமிடத்தில் திரும்பிவந்த பிறகு, நாம் வெளியில் போகலாம்” என்றான். தான்யா ஆமோதிக்க, வருண் அறை யிலிருந்து வெளியேறி அவனுடைய அறையை நோக்கிச் சென்றான்.

ஒரு மணி நேரத்துக்கு கொஞ்சம் குறைவான நேரத்தில் அவன் திரும்பிவர, ஆதித்யாவின் டெஸ்கில் உட்கார்ந்து இணையத்தில் சர்ஃப் செய்துகொண்டிருந்த தான்யா எரிச்சலுடன் “போர் அடித்து உட்கார்ந்திருக்கும் ஒரு வீட்டுக்காரியாக நான் ஆகிவிடுவேன் போல இருக்குது” என்றாள்.

அவன், “நான் வெளியே செல்லத் தயார்” என அவளிடம் அறிவித்தான்.

“க்ரேட்! என்னை சில நிமிஷங்களுக்குமுன்பு களைப்படையச் செய்த நீ எனக்குச்ச் சாப்பாடு கொடுக்கலைன்னா நான் எந்த நிமிஷத்திலயும் மயக்கமாகிவிடுவேன்” என்றாள் தான்யா. இருவரும் அறையிலிருந்து வெளியேறினார்கள்.

(பித்தலாட்டம் தொடரும்)

-  ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism