Published:Updated:

`இடைத்தேர்தலைத் தவிர்த்து அடுத்த எம்.எல்.ஏ-வை கட்சியே முடிவு செய்யலாம்!’ - நீதிமன்றம் கருத்து

`இடைத்தேர்தலைத் தவிர்த்து அடுத்த எம்.எல்.ஏ-வை கட்சியே முடிவு செய்யலாம்!’ - நீதிமன்றம் கருத்து
`இடைத்தேர்தலைத் தவிர்த்து அடுத்த எம்.எல்.ஏ-வை கட்சியே முடிவு செய்யலாம்!’ - நீதிமன்றம் கருத்து

ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ இறந்தால், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதைத் தவிர்த்து அடுத்த எம்.எல்.ஏ-வை அந்தக் கட்சியே தேர்வு செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்திருக்கிறது

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த தாமோதர் என்பவர் அளித்த மனுவில், ``மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கு முன்பாகவே திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சட்டத்துக்கு விரோதமானது. எனவே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ``ஒரு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., உயிரிழந்தால், குறிப்பிட்ட அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாமல், அத்தொகுதி எம்.எல்.ஏ.வுக்குப் பதிலாக அவரின் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவரை எம்.எல்.ஏ-வாகத் தேர்தெடுக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இடைத்தேர்தல்தான் அதிக அளவு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இது தேவையற்ற ஒன்று. அதே கட்சியைச் சார்ந்த நபரை எம்.எல்.ஏ-வாக்கினால் குற்றங்கள் குறைக்கப்படும். மக்களின் வரிப்பணமும் வீணாகாது. எனவே, இப்படியான முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கலாம் எனக் கருத்து கூறினர். ஆனால், தகுதி இழப்பு செய்யப்பட்ட தொகுதிகளுக்கு இந்தக் கருத்து பொருந்தாத வகையில் இருக்க வேண்டும் என்றனர். இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.