Published:Updated:

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சரண்டர்!

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சரண்டர்!
பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சரண்டர்!
பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் சரண்டர்!

மதுரை: சமீப காலமாக எங்கேயோ பதுங்கிக் கிடந்த, பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், பழைய வழக்கொன்றில் மதுரை நீதிமன்றத்தில் இன்று மதியம் சரணடைந்தார்.

பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வரிச்சியூர் செல்வம், கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மதுரையில், அரசியல் செல்வாக்கு மிக்க நபராக உலா வந்தார். சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன. அடிக்கடி என்கவுண்டர் லிஸ்டில் இவர் இருப்பதாக தகவல் வந்து கொண்டிருந்தது.

அ.தி.மு.க. ஆட்சி வந்த பின்பு, தன்னுடைய நடவடிக்கைகளை குறைத்துக்கொண்டார். அ.தி.மு.க. புள்ளிகளுடன் இணைய இவர் எடுத்த முயற்சி எடுபடவில்லை. இந்த நிலையில்தான் இரண்டு வருடத்திற்கு முன்பு, அண்ணா நகரில் ஆரிபு என்பவர் கொடுத்த, மிரட்டல் புகாரின் அடிப்படையில் செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

##~~##
இந்த வழக்கில், ஜாமீன் வாங்காமல் இருந்துள்ளார் வரிச்சியூர் செல்வம். பழைய வழக்குகளை தூசு தட்டிய காவல்துறை, இவ்வழக்கில் பிடிவாரண்ட் போட நீதிமன்றத்தை அணுகியது. அதன் அடிப்படையில், ஜே.எம்.6வது கோர்ட்டில் இன்று ஆஜராக வந்தார் செல்வம்.
இவ்வழக்கு பற்றி வரிச்சியூர் செல்வத்திடம் கேட்டபோது, ''போலீஸ் போட்ட புட்-அப் கேஸ்தான், மத்தபடி ஒன்னுமில்லை’’ என்றார்.
செ.சல்மான்

படம்: பா.காளிமுத்து