Published:Updated:

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!
பிரீமியம் ஸ்டோரி
நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

Published:Updated:
நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!
பிரீமியம் ஸ்டோரி
நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

ந்திய நீதி அமைப்பில் ஆயுள் தண்டனை என்பது சரிவர வரையறுக்கப்படாத ஒரு கால அளவு. வழக்குகளின் தன்மைக்கேற்ப, குற்றவாளிகளின் நிலைக்கேற்ப அது நிர்ணயிக்கப்படுகிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்று அ.தி.மு.க-வினரை விடுவிப்பதற்கு ஒப்புக்கொண்ட தமிழக கவர்னர், 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலையில் மெளனம் சாதிக்கிறார். இந்தநிலையில், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற முஸ்லிம் கைதிகள் சிலரின் விடுதலையும் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டும், 2018-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டும் நூற்றுக்கணக்கான ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலைசெய்யப் பட்டார்கள். இவ்வாறு விடுவிப்பதற்கு முழுத் தகுதியுடைய பெரும்பாலான முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகளின் மனுக்கள் பரிசீலிக்கப்படவே இல்லை என்கிற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

தங்களுடைய மனுக்கள் பரிசீலிக்கப் படாததை எதிர்த்து, தமிழகச் சிறைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளான அமானுல்லா, உமர் பாரூக், இப்ராஹிம், ஹாருண் பாஷா, ஊமை பாபு, யாசுதின், அக்கீம், ஜாஹீர், சாகுல் ஹமீது, கூலை இப்ராஹிம் ஆகிய பத்து பேர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளில் 2018 டிசம்பர் மற்றும் 2019 ஜனவரி மாதங்களில் தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். நீதிபதிகள் சி.டி.செல்வம், ராமதிலகம் அடங்கிய அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளில் நால்வரை (அமானுல்லா, அக்கீம், உமர் பாரூக், சாகுல் ஹமீது) உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மற்றவர்களின் மனுக்களின் மீது இரண்டு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுகளின் மீது நான்கு மாதங் களாகியும் தமிழக அரசின் உள்துறை எந்த வொரு முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக உள்துறைச் செயலகத்திடமிருந்து எந்தவொரு தகவலை யும் பெற முடியவில்லை என்கிறார்கள் மனுதாரர்கள்.

மேற்கண்ட சிறைவாசிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் மனோகரன் நம்மிடம், “அரசு இதில் எதுவும் முடிவு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தினாலே போதுமானது. நான்கு மாதங்களாக அதைச் செய்யாமல் கிடப்பில் போட்டிருந்தனர். இதனால் அவதூறு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். ஆனால், பரிசீலிக்கச் சொல்லிய மனுக்களை நிராகரித்து, விடுதலைக்கான உத்தரவையே எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்றுவிட்டது தமிழக அரசு” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

இதுகுறித்துப் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாம், “இவர்களின் குடும்பங்கள் அனைத்துமே வறுமையில் வாடுபவை. வழக்கு நடத்தவே இவர்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். தற்போது உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கான செலவுகளைச் சமாளிக்க இவர்களிடம் வசதி இல்லை. அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிழையான மனுவைத் தாக்கல் செய்து கால அவகாசம் கேட்டுள்ளது. அதுவும் பல மாதங்கள் இழுத்தடிக்கப்படும். அதற்குப் பிறகு விசாரணை நடைபெறும். எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் எப்படி எல்லாம் தாமதிக்க வழியுள்ளதோ... அதைத் தமிழக அரசு திட்டமிட்டே செய்கிறது” என்றார்.

முன்னாள் நீதிபதியான அரிபரந்தாமனிடம் இதுபற்றிக் கேட்டதற்கு, “அரசிடம் அவர்களை வெளியிடுவதற்குத் தடையாக ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், நீதி மன்றமே மனுவை விசாரித்து, எந்த நிபந்தனையும் இல்லாமல் நால்வரை விடுதலை செய்யவும் மற்றவர்களின் மனுக்களைப் பரிசீலிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்துவது நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும். இது கைதிகளின் தனிநபர் உரிமை சார்ந்தது. நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட எத்தனையோ வழக்குகளில், அடுத்தநாளே உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்குகிறது தமிழக அரசு. ஆனால், இந்த உத்தரவுகளின் மீது நான்கு மாதங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாவற் றுக்கும் மேலாக தற்போது மேல்முறையீட்டுக்குச் சென்றிருப்பது வருத்தம் அளிக்கக்கூடிய செயல். உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறை யீட்டைத் தள்ளுபடி செய்துவிடும் என்றே நம்புகிறேன்” என்றார்.

நீதிமன்றத்தை அவமதிக்கிறதா தமிழக அரசு? - நால்வர் விடுதலையிலும் தாமதம்!

அரசு இயந்திரத்தின் துரித நடவடிக்கைகள் நீதியை அனைவருக்கும் பாரபட்சமின்றி பெற்றுத்தருவதாக இருக்க வேண்டும் என்பதே கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கை. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

  - இ.மோகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism