Published:Updated:

சிரச்சேதத்துக்கு காத்திருக்கும் சிறுவன்! - ‘அரக்க தேச’மான அரபு தேசம்...

சிரச்சேதத்துக்கு காத்திருக்கும் சிறுவன்! - ‘அரக்க தேச’மான அரபு தேசம்...
பிரீமியம் ஸ்டோரி

லகில் 106 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. மரண தண்டனை நடைமுறையிலிருக்கும் 56 நாடுகளிலும் அதை ஒழிப்பதற்கான விவாதங்கள் நடந்துவருகின்றன. இப்படியான சூழலில், 10 வயது சிறுவனாக இருந்தபோது அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, மூன்று ஆண்டுகள் கழித்து அந்தச் சிறுவனை கைதுசெய்தது சவுதி அரேபிய அரசு. இப்போது அந்தச் சிறுவனுக்கு 18 வயது நெருங்கும் நிலையில், அரசுக்கு எதிராகப் போராடிய குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்க தீர்மானித்திருக்கிறது சவுதி அரேபியா. அந்த நாட்டில் சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கச் சட்டத்தில் இடம் இல்லை என்பதால், 18 வயதாகும் வரை காத்திருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறுகிறது அந்த அரசு. அதற்காக உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு சவுதி அரேபிய அரசுக்கு எதிராக ஷியா முஸ்லிம் பிரிவினர் க்வெய்ஃப் மாகாணத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது 10 வயது சிறுவனாக இருந்த முர்டாஜா க்வெரிரிஸும் விளையாட்டுத்தனமாகப் போராட்டத்தில் கலந்துகொண்டான். அந்தப் போராட்டம் நடந்தபோது அரசு தரப்பு தாக்குதலில் சிறுவனின் அண்ணன் அலி கெவெரிரிஸ் கொல்லப்பட்டான். தொடர்ந்து, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து உளவுத்துறை மூலம் துப்பறிந்து, நடவடிக்கை எடுத்துவந்தது சவுதி அரேபிய அரசு. இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு வெளிநாடு செல்லும் தன் தந்தையை வழியனுப்ப, கிங் ஃபாட் காஸ்வே என்கிற இடத்துக்கு குடும்பத்துடன் வந்த முர்டாஜாவைக் கைது செய்தது காவல்துறை.

சிரச்சேதத்துக்கு காத்திருக்கும் சிறுவன்! - ‘அரக்க தேச’மான அரபு தேசம்...

கைது நடவடிக்கையின்போது சிறுவனுக்கு வாரன்ட், சம்மன் எதுவும் வழங்கப்படவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டான் சிறுவன். விசாரணை தொடங்கும்வரை வழக்கறிஞரைத் தொடர்புகொள்ளக்கூட அந்தச் சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ‘குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லாததால், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக அந்தச் சிறுவனைக் கடுமையாகச் சித்ரவதை செய்திருக்கிறார்கள், காவல் துறையினர்’ என்கிறது, ஐரோப்பிய மனித உரிமைக் கழகம். ‘ஆயுதம் வைத்திருந்தது, காவல் வாகனத்தை நோக்கிச் சுட்டது, காவல் நிலையத்தின்மீது பெட்ரோல் குண்டு வீசியது, கலவரத்தைத் தூண்டியது… எனப் பல தேசத் துரோகக் குற்றங்கள் முர்டாஜா மீது சுமத்தப்பட்டுள்ளன. அதனால்தான் அவனுக்கு மரண தண்டனை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என மத்திய கிழக்கு ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு உறுதிசெய்துள்ளது. வெகுவிரைவில் முர்டாஜாவுக்கு 18 வயது நெருங்கவுள்ளது. முர்டாஜா மட்டுமல்ல... இவனைப்போலவே சிறுவர்களாக இருந்தபோது கைது செய்யப்பட்ட அலி அல் நிமர் தாவூத அல்-மர்ஹூன், அப்துல்லா அல் ஜாஹீர் ஆகிய மூன்று பேரும் மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிரச்சேதத்துக்கு காத்திருக்கும் சிறுவன்! - ‘அரக்க தேச’மான அரபு தேசம்...

கடந்த 2011-ம் ஆண்டில் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளில் மன்னர் ஆட்சிக்கு எதிராக ‘அரபு வசந்தம்’ என்கிற பெயரில் எழுச்சிப் போராட்டங்கள் வெடித்தன. ஷியா இனமக்கள் அதிகம் வாழும் அரேபியாவின் கிழக்கு மாகாணங்களிலும் அது தீயாகப் பரவியது. இதனால், அரசக் குடும்பம் ஆடிப்போனது. அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதுடன், ஒட்டுமொத்த ஷியா இனத்தையும் அழிக்கும் வகையில் பழிவாங்கத் தொடங்கியது அரேபிய அரசு. அதற்கான ஆயுதம்தான் மரண தண்டனை. அதாவது, சிரச்சேதம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 37 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. அவர்களில் 33 பேர் ஷியா முஸ்லிம்கள். கடந்த 2016-ம் ஆண்டில், ஒரே நேரத்தில், ஷியா மதகுரு ஷேக் நிமர்-அல்-நிமர் உள்பட 47 பேர் சிரச்சேதம் செய்யப் பட்டனர். கடந்த 17 மாதங்களில் இதுவரை 249 பேர் இப்படிக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக அரேபியவை அதட்டக்கூட முன்வரவில்லை, வல்லரசுகள். காரணம் அவர்களின் வர்த்தக நலன்கள். சந்தர்ப்பவாதிகளுக்கும் சுயநலவாதி களுக்கும் முர்டாஜாவின் கதறல் எப்படிக் கேட்கும்?

- கே.ராஜூ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism