Published:Updated:

முப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை!

முப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை!
பிரீமியம் ஸ்டோரி
முப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை!

ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்!

முப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை!

ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவலம்!

Published:Updated:
முப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை!
பிரீமியம் ஸ்டோரி
முப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை!

முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ‘காவல் மரணம்’ தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகச் சில குற்றச்சாட்டுகளை சஞ்சய் பட் எழுப்பியதால், திட்டமிட்டு அவர் பழிவாங்கப்பட்டுள்ளார்’ என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

குஜராத் மாநில ஐ.பி.எஸ் கேடரான சஞ்சீவ் பட், இந்தியக் காவல் பணியில் 1988-ம் ஆண்டு இணைந்தார். 1990-ம் ஆண்டு, பி.ஜே.பி தலைவரான எல்.கே.அத்வானி தலைமையில் ரதயாத்திரை நடைபெற்றது. ரதயாத்திரை குஜராத்தில் நிறைவடைந்தபோது, பல இடங்களில் கலவரச் சூழல் ஏற்பட்டது. ஜாம் நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜாம்ஜோத்பூர் என்ற இடத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த, ஜாம் நகர் மாவட்டக் கூடுதல் கண்காணிப் பாளராக இருந்த சஞ்சீவ் பட் தலைமையில் போலீஸ் படை அனுப்பப்பட்டது.

முப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை!

ஜாம்ஜோத்பூரில் 133 பேரைக் கைதுசெய்து, அவர்களைச் சிறையில் அடைத்தது போலீஸ். அவர்களில் ஒருவரான பிரபுதாஸ் வைஷ்னானி என்பவர், ஒன்பது நாள் காவலுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், 10 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார். அந்த நபர் போலீஸ் காவலில் இருந்தபோது துன்புறுத்தப்பட்டதாக அவரின் சகோதரர் போலீஸில் புகார் அளித்தார். அந்த வழக்கில்தான், சஞ்சீவ் பட் மற்றும் தலைமைக்காவலர் பிரவின்சின் ஸாலா ஆகிய இருவருக்கும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம் நகர் அமர்வு நீதிமன்றம் இப்போது ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

ஆனால், ‘‘நேர்மையாகப் பணியாற்றிய என் கணவரைப் பழிவாங்குவதற்காக, 30 ஆண்டு கால வழக்கைத் தோண்டியெடுத்து, செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை வழங்கியுள்ளனர்’’ என்று சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா குற்றம் சாட்டியுள்ளார்.

2002-ல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அதையொட்டி, மோடிக்கு எதிராக சஞ்சீவ் பட் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தார். ‘குஜராத்தில் நடைபெறும் வன்முறைகளைக் கண்டுகொள்ளாமல் இருங்கள் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் நரேந்திர மோடி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்’ என்பது சஞ்சீவ் பட் எழுப்பிய முக்கிய குற்றச்சாட்டு. அதை, சிறப்பு புலனாய்வுக் குழு, நானாவதி கமிஷன் ஆகிய அமைப்புகளிடம் மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்திலும் சஞ்சீவ் பட் முன்வைத்தார். இதன் காரணமாக சஞ்சீவ் பட் கட்டம் கட்டப்பட்டதாகவும் அவருக்கு எதிரான சதிவலை பின்னப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பிரபுதாஸ் மரணம் தொடர்பான வழக்கு 1995-ம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. பின்னர், அதற்கு குஜராத் உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. 2011-ம் ஆண்டு அந்த வழக்குக்கான தடை நீக்கப்பட்டபோது, ‘பணிக்கு வரவில்லை’, ‘அரசு வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார்’ என்கிற காரணங்களைக்கூறி 2011-ம் ஆண்டு சஞ்சீவ் பட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இறுதியாக, 2015-ம் ஆண்டு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை!

மேலும் குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக வழக்கறிஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட வழக்கில், சஞ்சீவ் பட்டையும் கோத்துவிட்டு, 2018 செப்டம்பர் மாதம் சஞ்சீவ் பட்டை போலீஸார் கைதுசெய்தனர். அப்போது முதல் அவர் சிறையில் இருந்துவருகிறார்.

பிரபுதாஸ் மரணம் தொடர்பான வழக்கில், கூடுதலாக 11 சாட்சிகளை நீதிமன்ற விசாரணைக்கு அழைக்குமாறு குஜராத் உயர் நீதிமன்றத்திடம் சஞ்சீவ் பட் வேண்டினார். ஆனால், அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்து, வழக்கு விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாம் நகர் அமர்வு நீதிமன்றம் ஜூன் 20-ம் தேதி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள்தண்டனை விதித்தது.

தங்கள் குடும்பத்தையும் தன் கணவரையும் அசிங்கப்படுத்தவும் தங்களுக்கு நெருக்கடி கொடுக்கவும் ஆட்சியாளர்கள் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டனர் என்று குற்றம்சாட்டுகிறார் சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட். ‘‘தங்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை முன் தகவலின்றி வாபஸ் பெற்றனர். உறங்கிக்கொண்டிருந்தபோது படுக்கையறைக்குள் நுழைந்து என் கணவரிடம் விசாரணை நடத்தினார்கள் அதிகாரிகள். எங்கள் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துவிட்டனர்’’ என்றும் குற்றம்சாட்டுகிறார்.

‘நீதிக்காக என் கணவர் போராடினார். அந்தப் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். இந்தப் போராட்டத்தை நாங்கள் தனியாக நடத்த வேண்டுமா, உங்களுக்காகப் பாடுபட்ட காவல்துறை அதிகாரிக்காக,  நீங்களும் இணைவீர்களா என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள்’ என மக்களுக்குக் கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளார், ஸ்வேதா பட்!

- ஆ.பழனியப்பன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism