Published:Updated:

தூத்துக்குடியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

தூத்துக்குடியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை!
தூத்துக்குடியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை – இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை!

தூத்துக்குடியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த 50 வயது பெண்ணை பாலிய, வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் போலீஸ் உள்ளிட்ட இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவர் வளர்த்து வந்த ஆடு, மாடுகளை கடந்த 2014-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி வீரநாயக்கன் தட்டு கிராம காட்டுபகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த டெல்லி பட்டாலியனில் போலீஸாகப் பணிபுரிந்து வந்த சிவக்குமார் மற்றும் அவரின் நண்பரான சக்திவேல் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவ்வழியே வந்து கொண்டிருந்தவர்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து அப்பெண்ணின் புகாரின் அடிப்படையில், முத்தையாபுரம் போலீஸார், சிவக்குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் சிவகுமாருக்கு ரூ.4,500 மற்றும் சக்திவேலுக்கு ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் அதிரடி தீர்ப்பளித்தார். இதையடுத்து, இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்டுள்ள டெல்லி போலீஸாரான சக்திவேல் தற்போது வரை சஸ்பெண்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சூழலில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் என்றாலும், மகளிர் நீதிமன்றம் அதிரடியாக வழங்கிய தீர்ப்பு மக்களிடம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.