Published:Updated:

``8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது!”- உயர் நீதிமன்றம் அதிரடி

``8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது!”- உயர் நீதிமன்றம் அதிரடி
``8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது!”- உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கில், உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.  

``8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது!”- உயர் நீதிமன்றம் அதிரடி

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ்,சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தத் திட்டத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.  இத்திட்டம் மூலம் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க, சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அறிவித்ததோடு நிற்காமல், அதற்கான முதல்கட்ட பணியையும் துரிதப்படுத்தியது. இதனால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். 

``8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது!”- உயர் நீதிமன்றம் அதிரடி

இதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், ரத்து செய்யக்கோரியும்  5 மாவட்ட விவசாயிகள், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உள்ளிட்ட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு 6 மாதங்களுக்கும் மேலாக விசாரித்து வந்தது. 

``8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது!”- உயர் நீதிமன்றம் அதிரடி

இந்நிலையில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் டிசம்பர் 14-ம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில், 8 வழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை 8 வாரங்களில் மீண்டும் உரிமையாளர்கள் பெயரிலேயே பதிவுசெய்ய வேண்டும். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை 8 வாரத்தில் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்துசெய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக அறிவிக்கப்பட்ட அரசாணையும் ரத்து செய்யப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே, 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இத்தீர்ப்பினால், 5 மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.