Published:Updated:

நாவரசு கொலை... ஜான் டேவிட்டுக்கு ஆயுள்: SC தீர்ப்பு

புதுடெல்லி, ஏப்.20,2011

நாவரசு கொலை... ஜான் டேவிட்டுக்கு ஆயுள்: SC தீர்ப்பு

மாணவர் நாவரசு ராகிங் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ##~~##

சித‌ம்பர‌ம் மு‌த்தையா மரு‌‌த்துவ‌க் க‌ல்லூ‌ரி‌‌யி‌ல் படி‌த்து வ‌ந்த மாணவ‌ர் நாவரசு 1996-‌ம் ஆ‌ண்டு சக மாணவ‌ர் ஜா‌ன் டே‌வி‌ட்டால் ராகிக் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக மு‌ன்னா‌ள் துணைவே‌ந்த‌‌ர் பொ‌ன்னுசா‌மி‌‌யி‌ன் மக‌னான நாவரசுவின் உடல் து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி சூ‌ட்கே‌ஸி‌ல் அடை‌த்து ‌வீ‌சி எறியடப்பட்டது.

இதுதொடர்பாக ஜான் டேவிட்டை கைது செய்த காவல்துறை, அவரது வாக்குமூலத்தைக் கொண்டு நாவரசின் உடலை மீட்டது.

இந்த வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த கடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு இர‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை ‌வி‌தி‌த்தது.

நாவரசுவை கொலை செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும், அவரை கடத்தியதற்கு மற்றொரு ஆயுள் தண்டனையும் சட்ட விரோதமாக அடைத்து வைத்ததுடன், சாட்சிகளை கலைக்க முயன்றதற்கு 7 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தீர்ப்பளித்தார்.

இவற்றை அவர் தொடர்ந்து அனுபவிக்க வைக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், இ‌ந்தத் ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து ஜா‌ன் டே‌வி‌ட் சார்பில் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், வி.பக்தவச்சலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மருத்துவக் கல்லூரி மாணவர் ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

ஜான்டேவிட் தான் இந்த கொலையை செய்தார் என்பதற்கு போதுமான, திருப்திகரமான சாட்சியங்கள் இல்லை என்று அவர்கள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

பின்னர், ஜா‌ன் டே‌வி‌ட் ‌விடுதலையை எ‌‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செ‌‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழக்கை விசாரித்து வந்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ ‌நீ‌திப‌திக‌ள் முகு‌ந்த‌ம் ஷ‌ர்மா, அ‌னி‌ல் தபே ஆ‌கியோ‌ர் அடங்கிய பெஞ்ச் இ‌ன்று ‌தீ‌‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

கடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தால் ஜா‌ன் டே‌வி‌ட்‌டு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட இர‌‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனை செ‌ல்லு‌ம் எ‌ன்று அந்தத் தீர்ப்பில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தெரிவித்தது.

அத்துடன், மாணவ‌ர் நாவரசு கொலை வழ‌க்‌கி‌ல் செ‌ன்னை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற செய‌ல்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனர்.

இந்த வழ‌க்கை ச‌ரியாக ‌விசா‌ரி‌க்காம‌‌ல், ஜா‌ன் டே‌வி‌ட்டு‌க்கு விதிக்கப்பட்ட இ‌‌ட்டை ஆயுள் தண்டனையை சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து செ‌ய்ததை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌ம் அவர்கள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜா‌ன் டே‌வி‌‌ட் உடனடியாக சரணடைய வே‌ண்டு‌ம் எ‌ன்று நீதிபதிகள் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.