Published:Updated:

செப்.25ல் ஆஜராகாவிடில் பிடிவாரண்ட்: விஜயகாந்த்துக்கு நீதிபதி எச்சரிக்கை!

Vikatan Correspondent

விழுப்புரம்: அவதூறு வழக்கில் வரும் 25ஆம் தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற தே.மு.தி.க பொதுக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் ஆஜராகவில்லை.

##~~##
இதனை கண்டித்த நீதிபதி, வரும் 25ஆம் தேதி விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அவதூறு வழக்கில் ஏற்கனவே விஜயகாந்த்துக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.