Published:Updated:

கனிமொழி ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 20-க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, மே 7,2011

கனிமொழி ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 20-க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, மே 14,2011

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில், கனிமொழியின் முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  மே 20-க்கு இன்று ஒத்தி வைத்தது.

கனிமொழிக்கு ஜாமீன் அளிக்கப்படுமா அல்லது நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுவாரா என்ற க்ளைமாக்ஸ் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கனிமொழி ஜாமீன் மனு மீதான வழக்கு மீதான உத்தரவை மீண்டும் ஒத்திவைத்தது ஆன்டி-க்ளைமாக்ஸ் ஆனது.

"மே 20-க்கு உத்தரவு ஒத்திவைக்கப்படுகிறது," என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.

இதேபோல், 2ஜி வழக்கில் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டோரின் முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவும் ஒத்திவைக்கப்பட்டன.