Published:Updated:

ஷேர் ஆட்டோக்கள்: கட்டணங்களை முறைப்படுத்த நீதிமன்றத்தில் வழக்கு!

Vikatan Correspondent
ஷேர் ஆட்டோக்கள்: கட்டணங்களை முறைப்படுத்த நீதிமன்றத்தில் வழக்கு!
ஷேர் ஆட்டோக்கள்: கட்டணங்களை முறைப்படுத்த நீதிமன்றத்தில் வழக்கு!
ஷேர் ஆட்டோக்கள்: கட்டணங்களை முறைப்படுத்த நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: ஷேர் ஆட்டோக்கள் மற்றும் டாடா மேஜிக் போன்ற வாகனங்களுக்கான கட்டணத்தை முறைபடுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் டாடா மேஜிக் போன்ற வாகனங்களுக்கான கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் அண்ணாமலை, ராகவன் உள்ளிட்ட 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஷேர் ஆட்டோக்கள் எவ்வித கட்டண வரைமுறையும் இல்லாமல் இயங்கி வருகிறது. எனவே, ஷேர் ஆட்டோ மற்றும் டாடா மேஜிக் போன்ற வாகனங்களுக்கான பயணக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.

மேலும், அனுமதி பெறாமல் இயங்கி வரும் ஷேர் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது

இந்த வழக்கு நீதிபதி வி.ராம சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்துறைச் செயலர், போக்குவரத்துத் துறை ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் இது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.