Published:Updated:

தருண் தேஜ்பாலுக்கு கோவா சிறையில் அளிக்கப்பட்ட வசதிகள் ரத்து!

Vikatan Correspondent
தருண் தேஜ்பாலுக்கு கோவா சிறையில் அளிக்கப்பட்ட வசதிகள் ரத்து!
தருண் தேஜ்பாலுக்கு கோவா சிறையில் அளிக்கப்பட்ட வசதிகள் ரத்து!
தருண் தேஜ்பாலுக்கு கோவா சிறையில் அளிக்கப்பட்ட வசதிகள் ரத்து!

பானாஜி: தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு கோவா சிறையில் அளிக்கப்பட்ட வசதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால், சக பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர், பனாஜி அருகே வாஸ்கோ நகரில் சடா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  தேஜ்பாலின் ஜாமீன் மனு வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலையில் கோவா சிறையில் திடீரென்று சிறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் தருண் தேஜ்பால் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த சோதனையில் மொத்தம் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள், வசதிகள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து உதவி கலெக்டர் கௌரிஷ் ஷங்வால்கர் நிருபர்களிடம் கூறுகையில், ''திங்கட்கிழமை செல்போன்கள் பறிமுதல் செய்ததை தொடர்ந்து தருண் தேஜ்பால் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் வசதி குறைக்கப்பட்டுள்ளது. தேஜ்பாலின் வழக்கறிஞர் விரும்பும்போது அவரை சந்திக்க முடியும்.

அதேசமயம் மற்ற கைதிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கைதிகள் யாரை சந்திக்க விரும்புகிறார்கள் என்று ஒரு பட்டியல் வழங்கியுள்ளனர். அவர்கள் மட்டும் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 3 மணியில் இருந்து 5.30 மணிக்குள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.