Published:Updated:

கன்னியாகுமரி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் உதயகுமாருக்கு முன்ஜாமீன்!

மதுரை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் உதயகுமாருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அரசின் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக உதயகுமார் மீது, கூடங்குளம் போலீசார் ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்தனர். அந்த வழக்கில் வள்ளியூர் நீதிமன்றத்தில் உதயகுமார் ஆஜராகாததால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதையடுத்து போலீசார் கைது செய்யாமல் இருக்க, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று உதயகுமார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் உதயகுமார் கீழ் நீதிமன்றத்தில் சரண் அடைந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இருநபர் ஜாமீன் பிணைய பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு