Published:Updated:

நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம்: வழக்கறிஞர் சங்கங்களுக்கு நோட்டீஸ்!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பாக பதிலளிக்குமாறு அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோன்று கடந்த மாதம் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் உள்பட சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, 'நீதிமன்றங்களின் கவுரவத்தை காப்பாற்றும் குழு' என்ற அமைப்பை மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் தொடங்கினார். இது தொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

ராஜகோபாலின் கடிதத்தை மனுவாக ஏற்று உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதனை இன்று விசாரித்த நீதிபதி, நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பாக பதிலளிக்குமாறு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.