Published:Updated:

நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: உதயகுமார் ஆவேசம்

Vikatan Correspondent
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: உதயகுமார் ஆவேசம்
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: உதயகுமார் ஆவேசம்
நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: உதயகுமார் ஆவேசம்

இடிந்தகரை: நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆவேசமாக கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ள நிலையில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள உதயகுமார், உச்ச நீதிமன்றம் தமிழக மக்களை கைவிட்டுவிட்டது என்றும், உச்ச நீதிமன்றம் மக்களின் கருத்தை மதிக்க தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பையே மதிக்கவில்லை என்று தெரிவித்த உதயகுமார், அணுசக்திக்கு எதிரான இயக்கம் நீதிமன்றங்களை நம்பவில்லை என்றார்.

பூவுலகின் நண்பர்கள் மேல்முறையீடு செய்வார்களா என்று தெரியாது என கூறிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தை தொடர்ந்து எதிர்ப்போம் என்றார்.