Published:Updated:

2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்த மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறதி நோய் உள்ளதால் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ நீதிமன்றம், இது தொடர்பாக தயாளு அம்மாள் உடல் நிலை குறித்த மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்து வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.