Published:Updated:

பொன்முடி சொத்துக்களை முடக்கக் கோரிய மனு தள்ளுபடி!

பொன்முடி சொத்துக்களை முடக்கக் கோரிய மனு தள்ளுபடி!
பொன்முடி சொத்துக்களை முடக்கக் கோரிய மனு தள்ளுபடி!
பொன்முடி சொத்துக்களை முடக்கக் கோரிய மனு தள்ளுபடி!

விழுப்புரம்: தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக்களை முடக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனுவை, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பொன்முடியின் சொத்துக்களை முடக்கி வைக்க உத்தரவிடக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.