Published:Updated:

காடுவெட்டி குருவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!

Vikatan Correspondent
காடுவெட்டி குருவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!
காடுவெட்டி குருவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!
காடுவெட்டி குருவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து பா.ம.க எம்.எல். ஏ  காடுவெட்டி குரு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு இளைஞர் சித்திரைத்திருநாள் பெருவிழாவை பா.ம.க நடத்தியது. அதில் கலந்துகொள்ள சென்றபோது இரு தரப்பினரிடையே மோதல் எழுந்தது. இதையடுத்து பா.ம.க முன்னாள் எம்.எல்.ஏ குரு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காடுவெட்டி வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.