Published:Updated:

வைகோ மீதான பொடா வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!

வைகோ மீதான பொடா வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
வைகோ மீதான பொடா வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
வைகோ மீதான பொடா வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை திரும்ப பெற முடியாது என்று பொடா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மதுரை திருமங்கலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த ம.தி.மு.க பொதுக் கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்பட 9 பேரை  காவல்துறையினர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதில், இளவசரன், பி.எஸ்.மணியன் ஆகியோர் இறந்துவிட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, வைகோ உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கை வாபஸ் பெறப் போவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இதனை ஏற்க பொடா நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், பொடா நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ உள்பட 7 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், வைகோ உள்பட 7 பேர் மீதான பொடா வழக்கை திரும்ப பெற முடியாது என்ற பொடா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்தது.