Published:Updated:

டெல்லி குண்டுவெடிப்பு: காஷ்மீரில் இருந்து ஹூஜி இ-மெயில்; 3 பேரிடம் விசாரணை!

டெல்லி குண்டுவெடிப்பு: காஷ்மீரில் இருந்து ஹூஜி இ-மெயில்; 3 பேரிடம் விசாரணை!
டெல்லி குண்டுவெடிப்பு: காஷ்மீரில் இருந்து ஹூஜி இ-மெயில்; 3 பேரிடம் விசாரணை!

புதுடெல்லி, செப்.8,2011

டெல்லி குண்டுவெடிப்பு: காஷ்மீரில் இருந்து ஹூஜி இ-மெயில்; 3 பேரிடம் விசாரணை!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிகழ்ந்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹூஜி (ஹர்கத் - உல் - ஜிகாதி இஸ்லாமி) இயக்கத்தின் பெயரில் வந்த இ-மெயில் ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ##~~##

இதுதொடர்பாக, இ-மெயில் அனுப்பப்பட்ட இன்டர்நெட் சென்டரின் உரிமையாளர் உள்பட மூன்று பேரிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகினர்; சுமார் 75 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, ஹூஜி இயக்கத்தின் பெயரில் புதன்கிழமை இ-மெயில் ஒன்று வந்தது. அதில், அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் இதுபோன்ற தாக்குதல் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள இன்டர்நெட் சென்டர் ஒன்றில் இருந்து அந்த இ-மெயில் அனுப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர் மெஹ்மூத் காவ்ஜா என்பவர் உள்பட மூன்று பேரிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட இன்டர்நெட் மையம் அமைந்துள்ள பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.