Published:Updated:

டெல்லி தாக்குதல்: இந்தியன் முஜாகுதீனும் பொறுப்பேற்பு!

Vikatan Correspondent
டெல்லி தாக்குதல்: இந்தியன் முஜாகுதீனும் பொறுப்பேற்பு!
டெல்லி தாக்குதல்: இந்தியன் முஜாகுதீனும் பொறுப்பேற்பு!

புதுடெல்லி, செப்.8,2011

டெல்லி தாக்குதல்: இந்தியன் முஜாகுதீனும் பொறுப்பேற்பு!

டெல்லி உயர் நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியன் முஜாகுதீன் இயக்கம் பொறுப்பேற்பதாக இ-மெயில் வந்துள்ளதால், தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சற்றே குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்று, ஹூஜி தீவிரவாத இயக்கத்தினரால் ஏற்கெனவே இ-மெயில் வந்திருப்பது கவனத்துக்குரியது.

ஐந்து பேரிடம் விசாரணை தீவிரம்..

டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியாகினர்; சுமார் 75 பேர் காயமடைந்தனர். ##~~##

இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, ஹூஜி இயக்கத்தின் பெயரில் புதன்கிழமை இ-மெயில் ஒன்று வந்தது. அதில், அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் இதுபோன்ற தாக்குதல் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள இன்டர்நெட் சென்டர் ஒன்றில் இருந்து அந்த இ-மெயில் அனுப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த மையத்தின் உரிமையாளர் மெஹ்மூத் காவ்ஜா என்பவர் உள்பட 4 பேரிடம் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளையில், உத்தரபிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியன் முஜாகுதீன் இ-மெயில்...


இந்த நிலையில், மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பத்திரிகை அலுவலகங்களுக்கு இந்தியன் முஜாகுதீனைச் சேர்ந்தவரால் இ-மெயில் ஒன்று வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், தாங்கள் தான் டெல்லி உயர் நீதிமன்ற தாக்குதலை நிகழ்த்தியதாகவும், வரும் செவ்வாய்க்கிழமை ஷாப்பிங் மால் ஒன்றில் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னணி பற்றி இன்னும் துப்பு துலங்காத நிலையில், இந்தியன் மூஜாகுதீனிடம் இருந்து வந்திருக்கும் இ-மெயிலுக்கு முக்கியத்துவம் அளித்து, அந்தக் கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை செயலர் பன்சால் கூறியுள்ளார்.

அதேவேளையில், வாரணாசி மற்றும் டெல்லியில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று இந்தியன் முஜாகுதீனிடம் இருந்து வந்த மெயிலுக்கும் தற்போது வந்துள்ள இ-மெயிலுக்கும் ஒற்றுமை இல்லாததும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. இ-மெயில் அனுப்பப்பட்ட இடம் குறித்து தகவல் அறிய கூகுள் நிறுவனத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

ப.சிதம்பரம் ஆலோசனை...

டெல்லி தாக்குதல் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே, டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்கா, இலங்கை, சீனா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன.