Published:Updated:

கெய்ல் எரிவாயுக் குழாய் வழக்கு: விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி: தமிழகத்தில் கெய்ல் எரிவாயுக் குழாய் பதிப்பது குறித்த  வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநிதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலுள்ள 7 மாவட்ட விளைநிலங்கள் வழியே எரிவாயுக் குழாய் பதிக்க கெய்ல் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது.

இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு கெய்ல் நிறுவனத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவ்வாறு விரைந்து முடிக்க இயலாது என மறுப்பு தெரிவித்தார்.