Published:Updated:

சிங்கூர் நிலம்: மே.வ. அரசின் சட்டம் செல்லும்- ஐகோர்ட்

சிங்கூர் நிலம்: மே.வ. அரசின் சட்டம் செல்லும்- ஐகோர்ட்
சிங்கூர் நிலம்: மே.வ. அரசின் சட்டம் செல்லும்- ஐகோர்ட்

சிங்கூர் நிலம்: மே.வ. அரசின் சட்டம் செல்லும்- ஐகோர்ட்

கொல்கத்தா, செப்.28,2011

சிங்கூர் நிலம்: மே.வ. அரசின் சட்டம் செல்லும்- ஐகோர்ட்

சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் சட்டம் செல்லும் என கோல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதேவேளையில், டாடா நிறுவனம் நஷ்டஈடு கோரி மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணபிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, டாடா நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது சிங்கூரில் கார் தொழிற்சாலை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

கடும் எதிர்ப்பு காரணமாக தனது புதிய கார் தொழிற்சாலை திட்டத்தை குஜராத் மாநிலத்துக்கு டாடா நிறுவனம் மாற்றிக் கொண்டது. எனினும், சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம், டாடா நிறுவனம் வசமே இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, சிங்கூர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றினார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

விசாரணையின் முடிவில், சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் சட்டம் செல்லும் என கோல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அடுத்த கட்டுரைக்கு