Published:Updated:

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு!

விகடன் விமர்சனக்குழு
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு!
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு!
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக  வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை வழக்கறிஞர்கள் மீதான அவதூறு வழக்கு விசாரணையே இவ்வாறு நேரடியாக ஒளிபரப்பானது.

கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, மதுரை வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தமிழ்வாணன் மற்றும் செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், மதுரை வழக்கறிஞர் சங்க தலைவர் தர்மராஜ் ஆஜராகினார். செயலாளர் ராமசாமி ஆஜராகவில்லை.

நீதிபதிகள் சரமாரி கேள்வி

விசாரணையின்போது, மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பல்வேறு புகைப்படங்களை தர்மராஜிடம் காட்டி, நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு தர்மராஜ், சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை என பதிலளித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு!



இதையடுத்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால் அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும், பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தர்மராஜூக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நேரடி ஒளிபரப்பால் பரபரப்பு

இந்த நீதிமன்ற விசாரணை, உயர்நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காணொலியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை காண ஏராளமானோர் உயர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோன்று வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவது இந்திய அளவில் மட்டுமல்லாது, உயர் நீதிமன்ற வரலாற்றிலும் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பானது வழக்கறிஞர்களிடையே பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியது. அதே சமயம் அவர்கள் இதனை கைதட்டி வரவேற்றனர்.

படங்கள்:தி.குமரகுருபரன்