Published:Updated:

அணை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட்டை நாடியது தமிழக அரசு

அணை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட்டை நாடியது தமிழக அரசு
அணை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட்டை நாடியது தமிழக அரசு
அணை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட்டை நாடியது தமிழக அரசு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கட்கிழமை மனு தாக்கல் செய்தது.

'கடந்த சில நாட்களாக கேரள முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று பேசி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, அணைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாசலை சில அரசியல் கட்சியினர் சேதப்படுத்தியுள்ளனர்.

வல்லக்கடவு என்ற இடத்தில், ஜே.சி.பி. வாகனம் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ஒரு பிரிவினர் கால்வாய் வெட்டும் போராட்டம் என்ற பெயரில், அணையை சேதப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால், இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

எனவே, இதனை தடுக்கும் வகையில், கேரள அரசியல் கட்சியினர், பீதியை கிளப்பும் வகையில் செய்தி வெளியிடுவதை தடுக்க உத்தரவிட வேண்டும். உடனடியாக, முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்,' என்று அந்த மனுவில் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.