Published:Updated:

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு கூறும் நீதிபதிகள் இவர்கள்தான் 

Vikatan Correspondent
ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு கூறும் நீதிபதிகள் இவர்கள்தான் 
ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு கூறும் நீதிபதிகள் இவர்கள்தான் 

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் தொடர்பான விவரத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு கூறும் நீதிபதிகள் இவர்கள்தான் 

உச்ச நீதிமன்றச் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் சர்மா  இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜல்லிக்கட்டு தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்ததை சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்த டிசம்பர் 7-ம் தேதி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாகவும், அதனால் ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வே தீர்ப்பளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அமர்வில் நீதிபதி ஆர். பானுமதி இடம் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.