
ரூ,251 செல்போன் நிறுவனம் மீது ஊழல் வழக்கு

இந்தியா முழுவதும் 251 ரூபாய்க்கு மொபைல் என ரிங்கிங் பெல் நிறுவனம் அறிவித்தது. இதன் வாங்கி விற்ற அய்யம் எனும் நிறுவனம் ரிங்கிங் பெல் எம்.டி கோயல் மீது ஊழல் வழக்கு தொடர்ந்து உள்ளது. 30 லட்ச ரூபாயை தந்ததாகவும், 13 லட்சத்துக்கு மட்டுமே போன்களை வழங்கிவிட்டு மீதமுள்ள தொகைக்கு போன்களை வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்திடம் பணத்தை தரும் படி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் இந்த வழக்கில் கூறப்பட்ட்டுள்ளது. 7 கோடி பேர் இந்த செல்போனை வாங்க முன்பதிவு செய்து வெறும் 30000 பேருக்கு மட்டுமே போன் வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மோசடி என்றும் இந்த வழக்கில் கூறப்பட்டு 16 கோடி ஊழல் செய்துள்ளது என இந்த நிறுவனம் மீது காசியாபாத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.