Published:Updated:

கைதாகிறார் ஜெகன மோகன் ரெட்டி?

கைதாகிறார் ஜெகன மோகன் ரெட்டி?
கைதாகிறார் ஜெகன மோகன் ரெட்டி?
கைதாகிறார் ஜெகன மோகன் ரெட்டி?

ஹைதராபாத்:ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின்  முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து அவர் எந்த  நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஆந்திர மாநில கடப்பா எம்.பி.யும்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை,மே 25 ம்  தேதிக்கு முன்னர் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில்,ஆந்திராவில் ஜூன் 12 ம் தேதியன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலை  கருத்தில்கொண்டு,காங்கிரஸின் தூண்டுதலால் தாம் சிபிஐ-யால் கைது செய்யப்படலாம்   என்று ஜெகன்மோகன் ரெட்டி அச்சம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர்,ஹைதராபாத் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு  தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம்,அதனை தள்ளுபடி செய்தது.

ஜெகன்மோகனின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவரும்,ஜெகனுக்கு எதிரான  சட்டவிரோத சொத்துக் குவிப்பு வழக்கின் இணை குற்றவாளிகளில் ஒருவருமான ஆந்திர  கலால் துறை அமைச்சர் எம்.வெங்கடராமையா இன்று கைது செய்யப்பட்டு,5 நாள் சிபிஐ  காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் ஜெகனும்,தனது முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர்  நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு முன்னதாகவோ அல்லது நாளை சிபிஐ  முன்னர் ஆஜராகும்போதோ கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.