Published:Updated:

பெண் வேடமிட்டு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்

கார்த்திக் துரைமகாராஜன்.சி
பெண் வேடமிட்டு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்
பெண் வேடமிட்டு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்
பெண் வேடமிட்டு நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மாவட்டம், ரோஹ்டக் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் கைதி ஒருவர் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் காயமடைந்தனர். திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மாவட்டம் ரோஹ்டக்கில் உள்ள நீதிமன்றத்துக்கு கைதி ஒருவரை ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது, அந்த வளாகத்தில் பெண் போன்று உடையணிந்து கொண்டு நான்கு பேர் இருந்துள்ளனர். அந்த நான்கு பேரும், கைதி காரில் இருந்து இறங்கியவுடன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பித்துச் சென்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கைதி, வழக்கறிஞர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். ஆறுபேரும் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சுடப்பட்ட கைதி, ரவுடி ஆவார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.